Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி நாளில் மகாலட்சுமியை வரவேற்கும் மார்வாடிகள்.. செல்வ செழிப்பு அதிகரிக்க கொண்டாடும் பண்டிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலோனோர் குடும்பங்களில் தீபாவளி பண்டிகை நாளில் குல தெய்வ பூஜை செய்து அசைவ உணவு சாப்பிட்டு உறவுகளுடனும், நண்பர்களுடனும் இணைந்து பட்டாசு வெடித்து பலகாரங்களை பரிமாறிக்கொள்வார்கள். மார்வாடி சமூகத்தினர் தீபாவளி கொண்டாடுவதை காண்பதே சிறப்பாக இருக்கும். தீபாவளி நாளில் மார்வாடி சமூகத்தினர் பண்டிகையை எப்படி கொண்டாடுவார்கள் என்று பார்க்கலாம்.

தீபாவளி கொண்டாட்டம்: தீபாவளி தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்கக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது இந்துக்கள் பண்டிகையென பலரும் நினைத்துள்ளார்கள். இந்துக்கள் மட்டும் இல்லை, பல மதத்தவரும், பல்வேறு மாநிலத்தவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

Diwali Celebrations : Wealth and Prosporety Special Focus on Marwadi Celebrations of Diwali Lakshmi Pooja

மார்வாடிகள்: ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மார்வாடிகள் பாரம்பரியம் மாறாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக பூஜைகள் செய்வதுதான் தீபாவளியின் சிறப்பு. அதிகாலையில் இருந்தே வீடுகளில் பண்டிகை களைகட்டி விடும். வீடுகளை அலங்கரித்து பூஜை அறையில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வண்ண வண்ண விளக்குகளை வாங்கி வைத்திருப்பார்கள்.

மகாலட்சுமி வழிபாடு: "தீவாளி' என்றும் "தீபமாலிகா' என்று கொண்டாடுகின்றனர் மார்வாடிகள். தீபாவளியன்றே மார்வாடிகள் புதுக்கணக்கு துவங்குகின்றனர். வீடுகளில் லட்டு உள்ளிட்ட மஞ்சள் நிற இனிப்புகளை செய்து வைத்திருப்பார்கள். வீடு நறுமணம் நிறைந்திருக்கும். இது எல்லாமே செல்வ வளத்தை தரக்கூடிய அன்னை மகாலட்சுமியை ஈர்க்கக் கூடியவை.

லட்சுமி பூஜை: தீபாவளி தினத்தில் மாலையில் மார்வாடிகள் லட்சுமி பூஜை செய்கின்றனர். அன்று புதுக்கணக்கு ஆரம்பிப்பது வழக்கம். வணிக நிறுவனங்களை திறந்து வைத்து வியாபாரம் செய்கின்றனர். உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரும் ஆண்டு லாப ஆண்டாக இருக்க லக்ஷ்மி தேவியை வரவேற்று வழிபடுகின்றனர். தீபாவளியன்று மாலையில் தொடங்கும் பூஜை நள்ளிரவு வரை நீடிக்கும்.

பரம்பரை பரம்பரையாக பூஜை: வெள்ளித் தகட்டில் செய்யப்பட்ட லட்சுமி படத்தை பூஜை செய்து அதைப் பாதுகாத்து வைப்பார்கள். அந்தப் படம் வம்சாவழியாகத் தீபாவளியன்று வெளியில் எடுக்கப்பட்டு பூஜை செய்யப்படும். தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதன் மூலம் அன்றிரவு லட்சுமி தேவி தங்கள் வீட்டிற்கு வருவதாக எண்ணப்பட்டு இரவு முழுக்கக் கதவை மூடாது இருப்பார்கள். வீடு பூட்டியிருந்தால் வரும் லட்சுமி தேவி திரும்பிப் போய்விடுவதாக ஐதீகம்.

தாய விளையாட்டு: பார்வதி தேவி, சிவபெருமானுடன் தாயக்கட்டம் ஆடிய நாள் அது என்பதால் அன்றைய தினம் தாயம் ஆடுவது பல வட நாடுகளில் வழக்கமாயுள்ளது. வாணிபக் குடும்பங்களில் தீபாவளி இரவன்று அனைவரும் கண் விழித்து சீட்டுக் கட்டுகள் கொண்டு பணம் வைத்து விளையாடுவது வழக்கம். இது சூதாட்டமாக இருந்தாலும் மார்வாடிகளை பொறுத்தவரை தீபாவளியன்று பணம் வரும் விளையாட்டாகக் கருதப்பட்டு இன்றும் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது. இரவு சூதாட்டம் ஆடுவதால். அவ்வருடம் முழுதும் சுபிட்சமாக இருக்குமென்பது அவர்கள் நம்பிக்கை.

பங்குச்சந்தை முதலீடு: அது போல தீபாவளியன்று பங்குச்சந்தை முகூர்த்த நேரம் செயல்படும். அன்றைய தினம் பங்குச்சந்தையில் முதலீடுகள் செய்வார்கள். பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெரியவர்கள் கையில் கொடுத்துவிட்டு, புதிய நோட்டுக்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அன்று மார்வாடிகள் புதுத் தலைப்பாகை அணிந்து அமர்வதற்கு புது மெத்தையும் மாற்றிக் கொள்வார்கள்

இனிப்பு பலகாரங்கள்: பண்டிகை நாளில் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பாலாடை கச்சோரி, எள்ளுருண்டை, சோன்பப்டி, ஜிலேபி, பிஸ்தா பர்ஃபி போன்ற பலகாரங்கள் வீட்டிலேயே செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகம் செய்கின்றனர். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இன்றைக்கும் பாரம்பரியமாக தீபாவளியை கொண்டாடுகின்றனர் மார்வாடிகள்.

பசுக்கள்: மூன்று நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள் மூன்றாம் நாள் பசுக்களுக்கும் கன்றுகளுக்குமானது. மார்வாடி கலாச்சாரத்தில் அன்று பசுச்சாணத்தால் விளக்கு செய்து அவ்விளக்கைக் கொண்டு பசுவையும், கன்றுகளையும் தொழுது வீட்டிற்குக் கன்றை அழைத்து அந்த விளக்கை மிதிக்கச் செய்து அதன் மூலம் நற்பலன் வருவதாகக் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+