ரூ1 இருக்குல்ல? வீட்டில் வறுமையை விரட்டி.. பணத்தை பெருக்க செய்யும் அற்புதம்.. எளிய பரிகாரம் டிப்ஸ்
சென்னை: வறுமை நீங்கி, செல்வம் பெருக வேண்டுமா? வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கணுமா? கையில் 1 ரூபாய் இருந்தாலே போதும்.. எளிய பரிகாரங்கள் மூலம் இன்னல்களை போக்கிடலாம்.. இதோ ஒருசில பரிகாரங்கள்.
பெரும்பாலானோர், அவரவர் வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ செயல்பாடுகளை செய்துவிடுகிறார்கள். இதில் ஒருசில செயல்கள், நமக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். தெரியாமல் செய்யும் தவறுகளால், நமக்கு கஷ்டங்களும், இன்னல்களும், வந்துவிடுகின்றன..

எளிய பரிகாரங்கள்: இந்த துன்பத்தை போக்கவே, எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள.. அந்தவகையில், ஏழ்மை, வறுமையை விரட்டி, பணவரவை உண்டுசெய்யும் பரிகாரங்கள் பலவற்றை சொல்லி வைத்துள்ளனர். குறிப்பாக நாணய பரிகாரம் செய்தால், மகாலட்சுமியின் அருள் தாராளமாக கிடைக்கும் என்பார்கள்.
இதற்கு, புதன்கிழமைகளில் ஒரு மஞ்சள் துணியில் 5 மஞ்சள் கிழங்கு, 1 ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து கட்டி, வீட்டின் பூஜையறையில் வைக்க வேண்டும். குலதெய்வத்தை நினைத்து வீட்டில் நெய் தீபம் ஏற்றி வேண்டும். தீபம் தானாக அணைந்ததுமே, அந்த மஞ்சள் மூட்டையை பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோவில் வைத்துவிட வேண்டும். இதனால் வீட்டின் பொருளாதார சிக்கல் தீர்ந்துவிடும்.
வெற்றிலை: அதேபோல, ஒரு வெற்றிலையை எடுத்து, அதில், 1 ரூபாய் நாணயம், விரலி மஞ்சள், ஏலக்காய் இவைகளை சேர்த்து முடிச்சு போல கட்டிக்கொண்டு, உங்கள் வேண்டுதலை முழுமனதுடன் பிரார்த்திக்கொள்ள வேண்டும்.
வீட்டுக்கருகில் உள்ள கோயிலின் அரசமரத்தடியில், அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, அந்த 1ரூபாய் முடிச்சையும் மரத்தடியில் வைத்துவிட வேண்டும். மீண்டும் மனமுருகி வேண்டிக்கொண்டு, வீட்டிற்கு வந்து விடுங்கள். விரைவில் நீங்கள் கேட்டது கிடைக்கும். ஆனால், பழமையான அரச மரத்தினடியில் இந்த முடிச்சை மாலை 6 மணிக்குள்ளாக வைத்துவிட வேண்டும்.
அதேபோல, கல் உப்பினை கொண்டும் எளிய பரிகாரம் செய்யும்போது, வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும். காரணம், கல் உப்புக்கள் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.. இதனால், நேர்மறை ஆற்றலை ஈர்த்து, நேர்மறை ஆற்றலை அள்ளி தருகிறது.. எனவே சகல செல்வங்களையும் அள்ளித்தரும் ஐஸ்வர்யமாக இந்த உப்பு பார்க்கப்படுகிறது.
சமையலறை: சமையலறையில் கிழக்கு திசையில் நின்று நாம் சமைக்க வேண்டும்.. அப்போது, நமக்கு வலது பக்கம் தான் உப்பு இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். கல் உப்பு வைத்திருக்கும் ஜாடியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக்கூடாது.
1 ரூபாய் நாணயத்தை வைத்து, அதற்கு மேல் இந்த உப்பு ஜாடியை வைக்க வேண்டும். அதாவது நாணயத்தையே சிம்மாசனமாக கொண்டு அதன் மீது உப்பாக மகாலட்சுமி அமர்ந்திருக்கிறார் என்பது ஐதீகம்.. இப்படி செய்வதால், வீட்டில் கடன் பிரச்சினை நீங்கி பொருளாதார நிலை உயரும் என்று நம்பப்படுகிறது.
கல் உப்புக்கள்: ஒரு கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பை போட்டு, எலுமிச்சம்பழத்தை அதற்குள் வைக்க வேண்டும். பிறகு 4 காய்ந்த மிளகாய்களை, பாத்திரத்தின் 4 மூலைகளிலும் வைத்து, அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில் வைக்க வேண்டும். கல் உப்பு, மிளகாயின் கூர்மையான பகுதிகள், இவை இரண்டுமே எதிர்மறை சக்திகளை எடுத்துக்கொள்ளக்கூடியவை.. வாரம் ஒருமுறை இதனை மாற்றிவிட புதிதாக வைக்க வேண்டும். பழைய பொருட்களை ஓடும் நேரில் போட்டுவிட வேண்டும.
அதேபோல, கல் உப்பு தீபம் ஏற்றி வைத்தால், குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். முக்கியமாக பௌர்ணமி நாட்களில் கல்உப்பு தீபம் ஏற்றினால், தொழில் தடை, வருமான தடை, பதிவு கிடைப்பதில் இருக்கும் தடைகள் அனைத்தும் 48 நாட்களுக்குள் நீங்கிவிடும் என்பார்கள்.
பெருமாள் கோயில்: கடன் தொல்லை இருப்பவர்கள், பெருமாள் கோவிலுக்கு சென்று சனி மற்றும் புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வர வேண்டும். இப்படி வலம் வரும்போது, கடன் பிரச்சினை தீர்வதற்கு மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து 12 வாரங்கள் இப்படி செய்தாலே கடன் தீருவதற்கான வழி பிறக்கும்.
பரிகாரம்: அதேபோல, தூங்கும் போது, சுத்தமான படுக்கையில் தலையணைக்கு அடியில் இந்த 1 ரூபாய் நாணயத்தை தலையணைக்கு அடியில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் ஏழைகளுக்கு இந்த நாணயத்தை தானம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும், பணப்பிரச்சினையும் முழுமையாக நீங்கிவிடும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications