கோழி முட்டை பரிகாரம்.. 2 முட்டைகள் இருந்தாலே போதும்.. "எதிர்மறை சக்திகள்" நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்
சென்னை: எதிர்மறை சக்திகளை உங்களிடமிருந்து விரட்ட வேண்டுமா? அப்படியானால் முன்னோர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்து கடைப்பிடித்த பரிகாரங்களுள் ஒன்று முட்டை பரிகாரம். இதை எப்படி செய்வது?
வாழ்க்கையில் தடங்கல்கள், தடைகள் போன்றவைகள் அதிகமாக இருந்தால், முன்னோக்கி நகர முடியாது.. அந்தவகையில், எதிர்மறை சக்திகளை விரட்டி, அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்க வேண்டுமானால், அதற்கு பரிகாரங்கள் உதவுகின்றன. இதில் ஒன்றுதான் முட்டை பரிகாரம்.
முட்டை பரிகாரம்: இந்த முட்டை பரிகாரங்களிலேயே வகைகள் உண்டு.. அமாவாசை நாட்களில், 1 முட்டையை எடுத்து உப்பு நீராலும், எலுமிச்சை சாறு கலந்த நீராலும் நன்றாக சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். பிறகு கண்களை மூடிக்கொண்டு, உங்கள் எதிர்மறை சக்திகள் எல்லாமே விலக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தலையிலிருந்து காலை வரை, முட்டையால் ஒரு இடம் விடாமல் தடவ வேண்டும்.

எதிர்மறை சக்திகள்: முக்கியமாக கழுத்தின் பின்புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் எதிர்மறை சக்திகள் அதிகம் தங்கும் என்பதால் நன்றாக முட்டையால் தேய்க்க வேண்டும். இதனால் உடலிலுள்ள எதிர்மறை சக்திகள் எல்லாமே முட்டைக்குள் ஈர்க்கப்பட்டுவிடும். இப்படி உடம்பெல்லாம் முட்டையால் தேய்க்கும்போது, ஏதாவது ஓரிடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை தடவ வேண்டும்.
பிறகு முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து பார்த்தால், கொப்பளம், குமிழ்கள், ரத்தம், கருப்பு புள்ளிகள் இப்படி ஏதாவது இருந்தால், எதிர் மறை சக்திகள் உங்களிடமிருந்து நீங்கிவிட்டது என்று அர்த்தம். இந்த முட்டையை கழிவறையில் கொட்டிவிடலாம்.
விலகிவிடும்: பிறகு நீர்நிறைந்த பாத்திரத்தில் இன்னொரு முட்டையை போட்டு, இரவில் நீங்கள் தூங்கும்போது தலைமாட்டில் 3 நாட்கள் வைத்துக்கொள்ள வேண்டும். 3 நாட்கள் தண்ணீரை மட்டும் மாற்றி கொள்ளலாம். 4வது நாள் சாக்கடையில் வீசிவிட வேண்டும். இதனால் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகள் முற்றிலும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல, வாரம் ஒருமுறை அதாவது ஞாயிறு மாலையில் செய்யக்கூடிய முட்டை பரிகாரமும் உள்ளது.. ஆனால், பூஜையறையில் இதனை செய்யக்கூடாது. ஒரே ஒரு முட்டையை உங்கள் வலது கையில் வைத்து, உங்கள் இரு புருவங்களுக்கு இடையே இந்த முட்டை உங்க உடலில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.
"என்னை சூழ்ந்திருக்கும் கெட்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், தீயவை அனைத்தும் என்னை விட்டு செல்கிறது" என்று மனதிற்குள் ஆழமாக பதியவிட்டு வேண்டி கொள்ள வேண்டும். இப்படியே, இதே முட்டையை உங்களுடைய தொண்டையிலும், பிறகு மார்பிலும் வைத்து இதே வார்த்தைகளை சொல்ல வேண்டும்.
வேப்பமரம்: பின்னர், ஏதாவது ஒரு மரத்தின் மீது எறிந்து உடைத்து விட வேண்டும்... ஆனால், வேப்பமரம், அசோக மரம், வில்வ மரம், போன்ற தெய்வீக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் மரங்களின் மீது வீசியெறிய கூடாது.












Click it and Unblock the Notifications