வவ்வால் வீட்டுக்குள் வந்துவிட்டதா? தலையில் வௌவால் அடித்தால் என்ன அர்த்தம்? உடனே இதை செய்துடுங்க
சென்னை: வௌவால்கள் மனித குலத்துக்கு மிகச்சிறந்த நன்மையை தரக்கூடியவை.. ஆன்மீகத்தில் வவ்வால்கள் பற்றி சொல்லப்படுவதென்ன? வவ்வால்கள் வீட்டிற்குள் வரலாமா?
வவ்வால்களின் எச்சம் சிறந்த உரமாக திகழ்கிறது.. கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் இந்த வவ்வால்களுக்கான குகைகள் அதிகமாக இருக்குமாம்.. அவற்றில் வசிக்கும் வவ்வால் எச்சத்தை சேகரித்து, அதனை விற்று நல்ல வருமானம் பார்த்து வருகிறாராம்.

நன்மைகள்: உலகில் ஒரு லட்சம் பாலூட்டிகள் இருந்த நிலையில், இப்போதைக்கு வெறும் 4000 மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அதாவது, இந்த எண்ணிக்கையிலுள்ள பாலூட்டிகளில் 4-ல் 1 பகுதி இனங்களை கொண்டதுதான் இந்த வவ்வால் இனம். பறக்கக்கூடிய தன்மையைப் பெற்ற, ஒரே பாலூட்டி இனமும் இந்த வவ்வால்கள் மட்டுமே... இரவில் விழித்து, பகலில் பதுங்கி, மனிதன் நலமுடன் உயிர் வாழ்வதற்கான பல உதவிகளை செய்யக்கூடியது வவ்வால்கள்.
இந்த வவ்வால்கள் குறித்து ஆன்மீகத்தில் பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.. வெளவால்களை வைத்து சகுனங்களும் சொல்லப்பட்டுள்ளன.. இந்து சம்பிரதாயப்படி இந்த வௌவால் வீட்டுக்குள் நுழைவது துரதிருஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.
வவ்வால்கள்: பெரும்பாலும், வவ்வால்கள், பாழடைந்த வீடுகள், கோவில்களில், அடர்ந்த மரங்களில் வாழக்கூடியவை.. அதனால் இந்த வவ்வால்கள் வீட்டிற்குள் வருவது நல்ல சகுனம் கிடையாது என்பார்கள். அதுமட்டுமல்ல, வாயினால் புரளி பேசி சாபம் பெற்றவர்கள்தான், அடுத்த ஜென்மத்தில் வவ்வால்ககளாக பிறப்பார்களாம். அதனால், வீடுகளில் வவ்வால்கள் வசித்தால், அந்த வீடுகள் பாழடைந்துவிடும் என்றும் சொல்லப்படுவதுண்டு,
எப்போதுமே இருட்டான பகுதி இருந்தால் வவ்வால்கள் வரக்கூடும்.. மனித நடமாட்டமும் இல்லாமல் இருந்தால் வவ்வால்கள் எளிதாக நடமாடும்.. அந்தவகையில், வீடுகளுக்குள் வெளிச்சமும் மனித நடமாட்டமும் இல்லாமல் இருந்தால் வவ்வால்கள் அங்கேயே தங்கிவிடும்.. அதேபோல, வவ்வால்கள் பழங்களை சாப்பிடக்கூடியவை என்பதால், மக்கள் வாழும் பகுதிகளிலும் வாழுகின்றன்.
ஆரோக்கியம்: மாலை, இரவு நேரங்களில் காணப்படும் வவ்வால் வீட்டிற்குள் வந்தால் மிகப்பெரிய தீங்கு நடக்கும்.. வவ்வால் தலையில் அடித்தால், உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும்.. அதுவுமில்லாமல், வீட்டில் யாரோ ஒருவர் உயிரிழக்க நேரிடுமாம்.. எனவே வவ்வால் தலையில் அடித்தால், உடனே அருகிலுள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
வவ்வால்கள் ஏராளமான செல்வத்தின் சின்னம் என்று சீனர்கள் கருதுகின்றனர்.
கனவில் வவ்வாலை பார்த்தால்கூட, அதுவும் அசுபமாக கருதப்படுகிறது... உங்களுக்கு ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் வவ்வால்கள் உங்களைத் தாக்குவதை போல் கண்டால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும் அல்லது ஒரு நபரைப் பற்றி நீங்கள் மோசமாக உணரும் வாய்ப்பு ஏற்படக்கூடும் என்று கனவு சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கனவில் வவ்வால்: அப்படி கனவில் வவ்வால்கள் வந்துவிட்டால், நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டுமாம்.. இதை உணர்த்தவே, வவ்வால்கள் கனவில் வருவதாக ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
வவ்வால் கூட்டத்தை கண்டால், பெரும் ஆபத்து உங்களுக்கு ஏற்பட போகிறது அர்த்தமாம்.. ஒருவேளை நீங்கள் பிசினஸ் செய்யக்கூடியவராக இருந்தால், வியாபாரத்தை இழக்க நேரிடும் அல்லது உத்தியோகத்தை இழக்க நேரிடும் என்றும் சொப்பன சாஸ்திரம் கூறுகிறது.
செல்வந்தர்கள்: ஆனால், வவ்வால் உங்கள் வீட்டுக்குள் கூடு கட்டினால் நீங்கள் விரைவில் செல்வந்தராக போகிறீர்கள் என்று அர்த்தமாம்.. சீனர்களை பொறுத்தவரை, வவ்வால்கள் ஏராளமான செல்வத்தின் சின்னமாக கருதுகிறார்கள்.. அந்தவகையில், வவ்வால் உங்கள் வீட்டுக்குள் கூடு கட்டினால் மிகப்பெரிய பணக்காரராக போகிறீர்கள் என்று அர்த்தம். எனவே இதற்கெல்லாம் சகுனம் பார்க்க தேவையில்லை என்றும் சொல்கிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications