காலில் கருப்பு கயிறு அணிய கூடாதாமே? சிவப்பு நிற கயிற்றுடன்.. கறுப்பு கயிறையும் அணியலாமா? அடேங்கப்பா
சென்னை: காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பலன்கள் என்னென்ன தெரியுமா? சிலர் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது என்கிறார்களே? இதற்கு என்ன காரணம்? அப்படியானால் எங்கே கயிறு அணிந்து கொள்ளலாம்?
பழங்காலத்திலிருந்தே காலில் கயிறு கட்டும் பழக்கம் இருந்து வருகிறது.. அப்போது ஆண்கள் தங்களது வலது கால்களிலும், பெண்கள் இடது கால்களில் கயிறு கட்டிக் கொள்வார்களாம்.
ஈர்ப்பு தன்மை: பட்டு, தர்ப்பை, அருகம்புல் என்ற இந்த 3 பொருட்களையுமே கயிறு போல திரித்து கையில் அணிந்து கொள்வார்களாம்... அதிர்வுகளை ஈர்க்கும் தன்மையும், நவக்கிரகத்தின் கதிர் வீச்சுகளை, ஈர்க்கும் தன்மையும் இந்த பொருட்களுக்கு இருக்கிறது.. அத்துடன், நேர்மறை சக்தியை மனதில் அதிகரிக்க செய்வதால்தான், கருப்பு கயிறுகளைகட்டிக் கொள்கிறார்கள்.

பெரும்பாலானோர் கால்களில் கருப்பு கயிறு கொள்வார்கள். இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.. அதாவது, நம்முடைய உடலின் முக்கிய நரம்பு முடிச்சுப்பகுதியாக கணுக்கால் உள்ளது. அதனால் கணுக்காயில் கயிறு கட்டும்போது, நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் சரிநேர்க்கோட்டில் அலைபாயாமல் இருக்குமாம்.
ரத்த கட்டிகள்: கால்களை சுற்றியுள்ள கயிற்றால் செலுத்தப்படும் அழுத்தம், ரத்த ஓட்டத்தை தூண்டவும், ரத்த கட்டிகள் மற்றும் பிற சுழற்சி பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் பெரிதும் உதவுவதாக கூறுகிறார்கள். இந்த கயிற்றால் பயன்படுத்தப்படும் அழுத்தம் இயற்கையான அக்குபிரஷர் புள்ளியாக செயல்படுவதால், கால் தசைகளில் உள்ள பல்வேறு வலிகள் மற்றும் வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
அந்தவகையில், கருப்பு நிற கயிறுகளை அணிவது எதிர்மறை ஆற்றல் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆவிகளை விலக்கி வைக்கும் என்றும், சனி பகவான் எப்போதுமே ஒருவரின் கால்களேயே முதலில் பற்றுவதாலும், கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதாகவும், சொல்லப்படுகிறது..
பாதுகாப்பு : இந்நிலையில், காலில் கருப்பு கயிறு அணிந்து கொள்வது சரியல்ல என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள். சனாதன தர்மத்தின் படி, கருப்பு கயிறு பாதுகாப்பிற்கான அடையாளமாக கருதப்படுவதால், காலில் கட்டுவது கெட்டதாக கருதப்படுகிறதாம். இதனால் எதிர்மறை ஆற்றல்தான் அதிகரிக்கும், காலில் கருப்பு கயிறு கட்டினால் சனியின் நிலை வாழ்வில் அதிகரிக்கும் என்றெல்லாம் ஜோதிடர்கள் சிலர் சொல்கிறார்கள்.
எனவே, காலில் அணிவதை தவிர்த்துவிட்டு இடுப்பு, இடது கை, கழுத்து இப்படி கருப்பு நூலை அணிய சொல்கிறார்கள். குழந்தைகளுக்கு கருப்பு கயிறுகளை கழுத்தில் கட்டிவிடலாம்.. பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் கருப்பு கயிறை கட்டிக் கொள்ளலாம்.
இடுப்பில் கயிறு: இடுப்பில் கருப்பு கயிறு அணிவது இன்னும் சிறப்பு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. கருப்பு நூல் உடலில் நுழையும் எதிர்மறை ஆற்றலை அதனுள் எடுத்துக் கொள்கிறது. இதனால் எலும்பு நோய்கள் நம்மை அண்டாது.. இடுப்பில் கட்டுவதால் முதுகுத்தண்டில் தொந்தரவுகள் அண்டாது, முதுகெலும்பும் வலுவடைகிறது என்கிறார்கள்.
அப்படி அணிவதற்கு முன்பு சனி கோவிலுக்கு எடுத்துச்சென்று, சனி பகவானை வணங்கிவிட்டு அணியலாம். சிவப்பு நூல் அல்லது வேறு நிற நூல் கட்டியிருந்தால் அதனுடன் சேர்த்து கருப்பு நூலை கட்டக்கூடாதாம்.
யார் அணியலாம்: கருப்பு கயிறை யார் வேண்டுமானாலும் அணிய கூடாது.. தங்கள் ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் கருப்பு கயிறு அணிவதன் மூலம் பலன்கள் பெறலாம்.. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில், கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதால், சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள், கண் திருஷ்டி விலகும். பொருளாதார பிரச்சனை உள்ளவர்களும் கருப்பு கயிறு கட்டுவார்கள்..
எனவே, செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி கருப்பு கயிறு கட்டினால், பணப் பிரச்சனைகள் நீங்கி பணம் வரும். செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகளுடன் அணிவதால், பொருளாதார நிலைமை மேம்படும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த 9 முடிச்சுகளும் தனித்தனியாக இருப்பது நல்லது.
நம்பிக்கை: அதேபோல, இந்த கருப்பு கையிலிருந்து நீக்கக்கூடாது. அதுவாகவே கழண்டு விழலாம் அல்லது கயிறு ரொம்ப பழையதாகிவிட்டால் நீக்கலாம்.. அப்படியே நீக்கினாலும், அதனை அரச மரத்தடியில் வைத்துவிட்டு, ஒரு புதிய நூலை கட்டிக்கொள்ளலாம்... ஆனால் நாமாகவே கருப்பு நூலை கழட்டக்கூடாது.. சூரிய ஒளியிலிருந்து வீசும் கதிர்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை சக்தி, கருப்பு நிறத்துக்கு உண்டு.. எனவே, இந்த கயிறு கட்டுவதால் பலகாலமாக குணமடையாத தீராத நோயும் தீரும் என்று நம்பப்படுகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications