சென்னை பூந்தமல்லியில் உள்ள பைரவ சித்தர்! ஆச்சரியமூட்டும் சமாதி! அற்புதமான வாழ்க்கை வரலாறு!
சென்னை: சென்னை பூந்தமல்லியில் உள்ள பைரவ சித்தர் சுவாமிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவருடைய வரலாறு அத்தனை ஆச்சரியமாக இருக்கும். யார் இந்த பைரவ சித்தர். இவருக்கு இந்த பெயர் ஏற்பட காரணம் என்ன? என்பதையும் அறியலாம்.
இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை பூந்தமல்லியில் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த மகத்தான சித்தரை பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். நாட்டில் பல சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளனர். அவர்களின் வரலாறு அவ்வளவு ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.

பல சித்தர்களின் வரலாற்று குறிப்புகளை நம்மால் அறிய முடியாது. அந்த வகையில் நம்முடைய ஞானி ஶ்ரீ பயிரவ சித்தர் வரலாற்று குறிப்புகளையும் அவ்வளவாக அறிய முடியவில்லை. நாம் அடி முடி தேடாமல் சித்தரின் ஜீவசமாதியை வணங்கி அவரின் அருளாசி பெறுவோம்.
சிவ வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் நமது பைரவ சித்தர். தற்போது ஜீவ பீடம் உள்ள இடத்தில் தவத்தில் ஈடுபடுவார். இவர் தவத்தில் இருக்கும் போது இவரை சுற்றி நாய்கள் பாதுகாப்பாக சித்தரை காத்து இருக்கும். எப்போதும் நாய்கள் அவரை சுற்றியே இருக்கும். இவரும் பாசமாக இருப்பார். முதலில் நாய்களுக்கு உணவு அளித்து பின்னர் தான் உண்பார். நாய்களை பைரவர் என்றும் நாம் அழைக்கின்றோம். அதனால் மக்கள் அவரை பைரவ சுவாமி என்று அழைத்து மகிழ்ந்தனர்.
"நாயினும் கீழேன்" என்று திருவாசகத்தில் தன்னை தாழ்த்தி கொள்கிறார் மாணிக்கவாசகர் பெருமான். குளிர்ச்சி தரும் மல்லி பூக்கள் விளையும் இடமாக இருந்தால் இப்பகுதியை பூந்தன்மல்லி என்று அழைத்து பூந்தமல்லி என மாறி பூவிருந்தவல்லி யாக பெயர் பெற்றது. 1830-ம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவ படையான மெட்ராஸ் நேட்டிவ் காலாட்படை 40 வது படை பிரிவு இங்கு செயல்பட்டு வந்தது. (சித்தர் ஜீவன்)
வெளி நாட்டினரும் போற்றி வணங்கிய சித்தர் நமது பைரவ சுவாமிகள்.
மரங்கள், செடி கொடிகள் நிறைந்த இப்பகுதியில் வாழ்ந்து, சிவ வழிபாடு செய்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் ஆசிகளை வழங்கி 20:02:1888 ல் தற்போது ஜீவசமாதி உள்ள இடத்தில் ஜோதி ஆனார்.
இன்றும் குரு பூஜை மற்றும் விசேஷ பூஜைகளில் நாய்கள் இங்கு வருவதை காணலாம். ஜீவசமாதிக்கு வந்து சித்தரை வணங்கும் சித்தரடியார்களின் வாழ்க்கையில் பல பேருக்கு அற்புதங்களை செய்து இருக்கிறார் நமது பைரவ சித்தர் சுவாமிகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications