Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலது மூக்கில் மச்சம் இருந்தால் "அந்த விஷயத்தில் ஆர்வம் இருக்குமா"? பொறாமை குணம் யாருக்கு? ஆஹா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெற்றியில், மூக்கு, உதட்டின் மேல் மச்சம் இருந்தால் என்னென்ன பலன் தெரியுமா? பிற உடல் பாகங்களில் இருக்கும் மச்சத்திற்கும் பலன்கள் என்ன தெரியுமா?

முகம், கை, கால்கள், உதடு உள்ளிட்ட பகுதிகளில் மச்சம் இருக்கும். இது ஏதோ தோலில் ஏற்படும் மாற்றம் என நினைத்துக் கொள்ள கூடாது. இதற்கும் நம் குணாதிசயத்திற்கும் சம்பந்தம் உண்டு என்கிறது மச்ச சாஸ்திரம்.

Do you know macham benefits in Tamil

தோலில் உள்ள செல்கள் கொத்தாக வளர்ந்து எல்லா இடங்களிலும் பரவாமல் ஒரு இடத்தில் குவிந்திருப்பதுதான் மச்சம் என்பது அறிவியல்பூர்வமாக சொல்லப்படும் தகவலாகும்.

நெற்றியில் மச்சம் இருந்தால் அது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. அதே மச்சம் நெற்றியின் நடுவில் இருந்தால் அது ஞானம் என சொல்லப்படுகிறது. வலது பக்கத்தில் இருந்தால் அந்த நபர் தொழிலில் கொடி கட்டி பறப்பார் அல்லது சிறந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்திருப்பார். இடது புறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது கிடைப்பதே அரிதுதான்!

உதடுகளுக்கு மேல் மச்சம் இருந்தால் அந்த நபர் வாழ்வில் முன்னேற துடிப்பார் என்று அர்த்தம். மேல் உதட்டின் வலது அல்லது இடது பக்கம் இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட உணவு பழக்கத்தை கொண்டிருப்பவர் என்று அர்த்தம். மேல் உதட்டின் வலது அல்லது இடது மூலையில் மச்சம் இருந்தால் நீங்கள் ஒரு வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை தேடி செல்வதில் ஆர்வம் கொண்டவர் என்று அர்த்தம்.

உதடுகளிலேயே மச்சம் இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்வார்கள். உதடுகளுக்கு கீழே இருந்தால் உங்களுக்கு நடிப்பு மற்றும் நாடகக் கலைகளில் ஆர்வம் இருக்கலாம். இதே தாடையில் மச்சம் இருந்தால் அக்கறை மற்றும் பாசமாக இருப்பார்கள். அதோடு இவர்கள் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வலது தாடையில் மச்சம் இருந்தால் ராஜதந்திர தன்மையைக் குறிக்கும். அதே சமயம் இடது பக்கத்தில் இருந்தால் அவர்கள் எதையும் நேரடியாக அணுகக் கூடியவராகவும் இருப்பார்கள். அது போல் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் நேர்மையான, புத்திசாலித்தனமான நபர் என்று அர்த்தம். அத்தகைய நபர்கள் பொருள் இன்பங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

திறமையான விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். வலது புற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் குடும்பத்தை கவனிப்பதில் பொறுப்புமிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இடதுபுறத்தில் இருந்தால் அவர்கள் உள்முக சிந்தனையாளர்களாக இருப்பார்கள். கொஞ்சம் திமிர்பிடித்தவராகவும் இருப்பார்கள்.

தொப்புளுக்கு நெருக்கமான இடத்தில் மச்சம் இருந்தால் வலது புறத்தில் இருந்தால் பெண்களின் நிதியில் உயர்ந்தவராக வாழ நினைப்பார்கள். ஆனால் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கலாம்.

முதுகு பகுதியில் மச்சம் இருந்தால் அவர் நேர்மையானவராக இருப்பார். உண்மையான காதலை கொண்டிருப்பார்கள். மூக்கில் மச்சம் இருந்தால் உயர்ந்த சுயமரியாதையுடன் வாழ்வார்கள். அவர்கள் நேர்மையானவராகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார்கள். அதிலும் மூக்கின் நுனியில் இருந்தால் அவர் மிகவும் குறுகிய மனநிலையுள்ளவர். வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் உணர்ச்சிவசப்படுபவராகவும் பாலியல் செயல்களில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார்கள். இடது பக்கம் இருந்தால் அவர்கள் போராளியாக இருப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+