செய்வினை கோளாறுகள் நீங்க! என்ன மாதிரியான பரிகாரங்களை செய்யலாம்?
சென்னை: செய்வினை கோளாறுகள் நீங்க எந்த மாதிரியான பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். இது போல் பித்ருக்களுக்கு முறையானதை செய்யாமல் இருந்தால் அவர்கள் வாழ்வில் வளம் என்பதே கிடைக்காது. இதற்கும் நாம் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பித்ரு தோஷங்கள் இருந்தால் ஒருவரது வீட்டில் திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, வேலையின்மை, பண கஷ்டம் உள்ளிட்டவை இருந்தால் அதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதாவது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ப்பணத்தை நாமோ அல்லது நமது மூதாதையர்களோ செய்யாமல் இருந்தால் அது தோஷமாக பிரதிபலிக்கும்.

இந்த பித்ரு தோஷத்தை போல் பல்வேறு தோஷங்களை போக்க என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது:
பிரம்மஹத்தி தோஷம் நீங்க : ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
பித்ரு தோஷம் நீங்க : அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்க்கு எச்சில் அசுத்த இடங்கள் படாத, அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், எள்ளு ஆகியவற்றை கலந்து கொடுத்து வந்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
சூரிய தோஷம் நீங்க : ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சூரிய தோஷம் நீங்கும்.
களத்திர தோஷம் நீங்க : சுமங்கலி பெண்களுக்கு துணி வகைகள், தேங்காய், பூ, பழம், தாலிக் கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெற்றால் களத்திர தோஷம் நீங்கும்.
கால சர்ப்ப தோஷம் நீங்க : கால சர்ப்ப தோஷங்கள் நீங்க வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி அன்று அஷ்ட நாகங்களை வழிபட்டு அஷ்ட நாகங்களுக்கும் தீபமேற்றி, குங்கும அர்ச்சனை செய்தால் கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
செய்வினை தோஷம் நீங்க : குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பௌர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால், ஒருவர் செய்த செய்வினை உங்களைப் பாதிக்காமல் நல்ல பலனை அடையலாம்.
பூர்வ ஜென்ம கர்ம தோஷம் நீங்க: சீர்காழி அருகிலிலுள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தர்ப்பணம் திதி செய்ய பூர்வ ஜென்ம கர்ம தோஷம் நீங்கும்.
உயர் திரு. உலகாளும் காகம் வாகனம் ஈஸ்வர் தோஷம் நீங்க: கடுமையான பாதிப்புள்ளோர் இரும்பு விக்கிரகம், நீலக்கம்பளி, கருப்புப்பட்டு, கருப்பு பசு, சாலிக்கிராமம், எள்ளுடன் கூடிய பாத்திரம், அரசு வேம்பு உற்பத்தி செய்து திருமணம் செய்வித்தல், கருங்குவளைப் பூ, நீலம் இவைகளை தானம் செய்யலாம்.
ஜென்ம நட்சத்திரத்தில் மற்றும் சனிக்கிழமையில் தானம் செய்ய வேண்டும். கடுமையான முன் பாவ வினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
மாந்தி தோஷம் நீங்க : சிவன் கோவிலில் குளிகை நேரத்தில் விநாயகரை வணங்கிவிட்டு, சிவன் கோவிலை 18 முறை வலம் வந்து, பிறகு சிவனை தரிசனம் செய்து உங்களின் பேரில் அர்ச்சனை செய்துக்கொள்ளுங்கள். பிறகு அம்பாளை தரிசனம் செய்து, நவக்கிரகத்திற்க்கு சென்று சனி ஈஸ்வரர் பகவானுக்கு தீபம் ஏற்றிவிட்டு நேராக உங்களின் வீட்டிற்க்கு சென்றால் மாந்தியால் ஏற்பட்ட தோஷம் நீங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications