வடக்கு திசையில் துடைப்பத்தை வைக்கலாமா? இப்படி துடைப்பம் வைத்தால் வீட்டில் கஷ்டம், வறுமையும் வருமாம்
சென்னை: வீட்டிலுள்ள பொருட்களை முறையாகவும், சரியாகவும் வைத்திருந்தாலே பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள். அந்தவகையில், துடைப்பத்தை எப்படி பயன்படுத்த வேண்டும், அதற்குரிய திசைகள் என்னென்ன என்பது குறித்தும் வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது.
லட்சுமி தேவியின் சின்னமாக துடைப்பம் கருதப்படுகிறது.. அதனால்தான், துடைப்பத்தை எப்போதுமே வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டும் என்கிறார்கள்..

துடைப்பம்: அந்தவகையில், தெற்கு மற்றும் மேற்கு இடையே துடைப்பத்தை வைப்பது உரிய திசையாக இருக்குமாம்.. இதனால், உங்கள் வீட்டிலுள்ள செல்வம் அல்லது பேங்க் பேலன்ஸ் எப்போதும் காலியாகாமல் இருக்கும்.. அதேபோல, துடைப்பத்தை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசையில் வைத்தால், அது குடும்பத்தின் நிம்மதியை குலைத்துவிடும்.
துடைப்பத்தை காலால் மிதிப்பது மிகவும் தவறு.. துடைப்பம் மற்றவர்கள் கண்ணில் படுமாறு இல்லாமல் மறைவான இடத்தில் வைப்பது அவசியமாகும்.. அதேபோல செல்வம், ஆபரணங்கள், பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது... அப்படி வைத்தால், அது வீட்டின் நிதிநிலைமையை சீர்குலைத்துவிடுமாம்.
கிழக்கு திசை: எப்போதுமே துடைப்பத்தை நேராக நிற்க வைக்காமல், படுத்தவாறு வைக்க வேண்டும்.. துடைப்பத்தின் முகம் , எப்போதும் கிழக்கு நோக்கி வைத்தால் குடும்பத்துக்கு நல்லது.
எந்நேரமும் வீட்டை பெருக்கி கொண்டே இருக்காமல், காலை, மாலை இரு வேளைகளில் பெருக்கினால் போதும்.. மாலை நேரத்துக்கு மேல் விளக்கு வைத்து, வீட்டை பெருக்கக்கூடாது. அப்படியே பெருக்கினாலும், குப்பைகளை இரவில் வெளியே கொட்டக்கூடாது.
துடைக்க வேண்டாம்: குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலிருந்து கிளம்பியதுமே, வீட்டை துடைக்கக்கூடாது. வீட்டை துடைப்பதிலும் திசைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.. எப்போதுமே, மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்துதான் துடைப்பத்தை துடைக்க வேண்டுமாம்.
பழைய துடைப்பதையே பயன்படுத்தாமல், துடைப்பத்தை அடிக்கடி மாற்ற வேண்டும்.. புதிய துடைப்பம் வாங்க வேண்டுமானால், சனிக்கிழமைகளில் தாராளமாக வாங்கலாம்.. இதனால் நன்மை கிடைக்கும்.. ஆனால் எக்காரணம் கொண்டும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் துடைப்பம் வாங்கக்கூடாது..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications