திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நல்ல சான்ஸ்! ஹை ஸ்பீடு இன்டர்நெட்டுடன் ரெடியா இருங்க!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நல்லதொரு சான்ஸ் கிடைத்திருக்கிறது. திருப்பதி போனால் திருப்பம் கிடைக்கும். இதனால் ஏராளமானோர் தினசரி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்தியாவின் பணக்கார கடவுள் ஏழுமலையான் கோவில். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

tirupati spirtuality tirumala


கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்து விடுகின்றனர். இந்த கோயிலில் தினமும் சிறப்பு தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் குவிந்து வருகிறது.

வெளி மாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறையையொட்டி திருமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஒரு நாள் முழுவதும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலும் திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசன வரிசையில் தரிசனம் செய்ய பக்தர்கள் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் சுப்ரபாதம்,அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு முடிந்தது. அன்றைய தினமே மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் வெளியிடப்படும்.

நவம்பர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அது போல் வாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி மாலை 3 மணிக்கும் வெளியாகிறது.

இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு 24ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியமானது.

அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் ஜூலை 24 ஆம் தேதி வெளியானது. அதில் மொத்தம் 4.98 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமும் உடனே விற்றுத் தீர்ந்தன. டிராவல்ஸ் வைத்திருப்போர் மொத்தமாக புக் செய்துவிடுவதால் சாதாரண பக்தர்களுக்கு டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்பது புகாராகவே உள்ளது.

இந்த டிக்கெட்டுகளை புக் செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் லாகின் செய்துவிட வேண்டும். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தேதியில் லாகின் ஐடியையும் ,பாஸ்வேர்டையும் குறிப்பிட்டு உள்ளே சென்றால் சரியாக 10 மணிக்கு புக்கிங் ஓபன் ஆகும். இதற்கு ஹை ஸ்பீட் இன்டர்நெட் இருந்தால் மட்டுமே விரைந்து புக்கிங் செய்யப்படும். இல்லாவிட்டால் டிக்கெட் காலியாகவே இருக்கும், ஆனால் ஃபுல்லாகிவிட்டது என கூறி வெயிட்டிங் பிரீயட்டான 4 நிமிடங்களுக்குச் சென்றுவிடும். இந்த 4 நிமிடம் முடிந்து உள்ளே போவதற்குள் மீண்டும் இதே பிரச்சினை எழும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+