வீட்டில் பணம் புரள வேண்டுமா? இரவு 7 மணிக்கு சாம்பிராணியுடன் "இந்த" மூலிகைகளை சேருங்க! மேஜிக்கை பாருங்க
சென்னை: உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமானால் தினந்தோறும் இரவு 7 மணிக்கு சாம்பிராணி புகையுடன் இந்த மூலிகையை சேருங்கள். பிறகு மாற்றத்தை நீங்கள் உணர்ந்து உங்களது நலம் விரும்பிகளுக்கும், உறவினர்களுக்கும் சொல்வீர்கள்.
இதுகுறித்து தீபா தங்கராசு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் இரவு 7 மணிக்கு இப்படி செய்யுங்கள்!!

அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது.
அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள்.
இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி, விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.
அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.
சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.
சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.
சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.
சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.
சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.
சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
சாம்பிராணியில் ஜவ்வாது போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.
சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத் தடை ஆகியவை விலகும்.
சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.
சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தி தீராத செல்வ வளம் கிடைக்கப் பெறுங்கள். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications