முகம் பார்க்கும் கண்ணாடியை நிலைவாசலில் வைக்கலாமா? எந்த திசையில் மாட்ட வேண்டும்?
சென்னை: முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கே வைக்கலாம், எங்கெல்லாம் வைக்கக் கூடாது தெரியுமா? தவறான இடத்தில் வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்க!
வாஸ்து, சாஸ்திரம், சம்பிரதாயத்தில் பலருக்கு ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கும். இன்னும் பலருக்கு நம்பிக்கை இருக்காது. இதற்கு உதாரணமாக ஒரு திரைப்படத்தில் வருவது போல் நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்றால், எல்லாரும் வீடுகளில் நரியைத்தான் வளர்ப்பார்கள், நாயை அல்ல என்பார்கள்.

அது போல் பலருக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.
பொதுவாக வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்துவோம். அதில் கூட எங்கே வைத்து உபயோகப்படுத்த வேண்டும் என்பது இருக்கிறது. அது போல் எங்கே வைக்கக் கூடாது என்பதும் இருக்கிறது. கண்ணாடியில் வாஸ்துவா என நீங்கள் கேட்கலாமா? கண்ணாடி எல்லாம் லட்சுமி கடாட்சம்!
ஒரு சிலர் கண்ணாடியை படுக்கை அறையில் நாம் எழுந்திருக்கும் திசைக்கு எதிரே வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. இதை மறந்தும் கூட செய்யாதீர்கள். இப்படி வைத்தால் கண்ணாடியால் நிறைய எதிர்வினைகள் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் நாம் கண்ணாடியை பார்த்துக் கொண்டு எழுவதால் நாம் எந்த செயலை செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும்.
ஒரு வேளை படுக்கை அறையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கண்ணாடி இருந்தால் அதை எடுத்து திருப்பி வையுங்கள். இல்லாவிட்டால் அதன் மீது ஒரு துணியை போட்டு மூடி வையுங்கள். காலையில் உங்களுக்கு தேவையானபோது திறந்து பார்த்துக் கொள்ளலாம். அது போல் குளியல் அறையிலும் வைக்கக் கூடாது என்கிறார்கள்.
அப்படியே வைத்தாலும் வடக்கு திசையிலிருக்கும் சுவற்றில் அல்லது கிழக்கு திசை சுவற்றில்தான் வைக்க வேண்டுமாம். இது தவிர்த்து தெற்கு அல்லது மேற்கு திசையில் கண்ணாடி வைத்திருந்தால் வீட்டில் உள்ளோருக்கு நோய்கள் ஏற்படக் கூடும் என்கிறார்கள்.
அது போல் நிலை வாசலில் சிலர் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது அதிர்ஷ்டத்திற்காகத்தான். ஆனால் இப்படி வைக்கப்படும் கண்ணாடியாலும் சிலருக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. நிலை வாசலில் கண்ணாடி வைப்பதால் ஒரு சிலருக்கு பணப்பிரச்சினையும் ஒரு சில குடும்பங்களில் சண்டைகளை கூட இழுத்துவிடும்.
நிலை வாசலின் மேல் கண்ணாடி இருந்தால் அதை எடுத்து சுவற்றில் ஆணி அடித்து மாட்டி விடுங்கள். அதே நேரத்தில் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் நுழைந்ததும் கண்ணாடியை பார்க்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டின் நிலைவாசலில் அஷ்டலட்சுமிகள் வாசம் கொள்வார்கள். எனவே அங்கு கண்ணாடியை வைத்தால் வீட்டிற்கு வருவோரின் எண்ணங்களை அந்த கண்ணாடி உள்வாங்கும்.
வாஸ் பேசினில் கண்ணாடி வைக்க வேண்டும் என்றால் அதை மேற்கு, தெற்கு பகுதியில் வைக்கலாம். மற்ற இரு திசைகளில் வைக்கவே கூடாது. வீட்டில் மேற்கு, தெற்கு திசையில்தான் கண்ணாடிகளை வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருந்தால் உடனே கண்ணாடியை எடுத்து வைத்து சரியான இடத்தில் வையுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை! பாசிட்டிவ்வுடன் செய்தால் நிச்சயம் வெற்றிதான்!
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications