இந்த 6 ராசிக்காரர்கள் வைர நகைகளை அணியலாம்! யார் அவர்கள்? விலைதான் குறைஞ்சு போச்சே! ஜமாய்ங்க!
சென்னை: வைர நகைகளை யாரெல்லாம் அணியலாம், யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதை எல்லாம் பார்க்கலாம். இந்த வைரங்கள் உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்துமா? அதை வாங்கலாமா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளி, தங்கம், வைரம் உள்ளிடடவைகளில் நகைகள் உருவாக்கப்பட்டு அணிகிறார்கள். இதில் வெள்ளியை விட தங்கமும் தங்கத்தை விட வைரமும் விலை மதிப்புடையவை ஆகும். பொதுவாக அவரவர் வசதிக்கேற்ப நகைகளை வாங்குவர்.

தங்கத்தின் விலை எப்போதும் கூடி கொண்டே இருக்கும் என்பதால் அதன் மீது மக்கள் முதலீடு செய்வர். வசதி படைத்தவர்கள் வைரத்தில் நகைகளை வாங்கி அணிந்து கொள்வார்கள். சிலர் வைர கற்களில் ஆடைகளை கூட அணிந்து கொள்கிறார்கள்.
தங்க நகைகளை அணிவதில் பிரச்சினை இல்லை. ஆனால் வைரத்தை அணிவதற்கு முன்பு நம் ராசிக்கு அது ஒப்புக் கொள்ளுமா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இந்த வைரங்கள் எந்த ராசிகளுக்கு ஒப்புக் கொள்ளுமோ அவர்கள் அணிந்தால் அவர்களுக்கு யோகம் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
இதே வைரம் ஆகாத ராசிக்காரர்கள் அதை அணிந்தால் அவர்களுக்கு எதிர்மறையான பலன்களையே கொடுக்கும் என்கிறார்கள். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் வைரம் போடலாம், யாரெல்லாம் போடக் கூடாது என்பதை அணியலாம்.
மேஷ ராசி: இந்த ராசிக்காரர்கள் வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும். உண்மையில் இது ஒரு தீயின் அடையாளம். இது வேலையில் சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினைகளை கொடுக்கும். முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்கிறார்கள்.
ரிஷப ராசி: அது போல் ரிஷப ராசிக்காரர்கள் இந்த வைரத்தை அணிந்தால் ஆரோக்கியத்தை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். வைரம் என்பது சுக்கிரனின் கல் ஆகும். இது அன்பு, செல்வம், புகழ், வெற்றி, செழிப்பை தரும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் அப்படியே எதிர்மறையான பலன்தான் கிடைக்கும்.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்வார்கள். ஆனால் இந்த வைரத்தை அணிந்தால் அந்த முன்னேற்றம் தடைப்படும். வைரத்தையே வாங்கிவிட்டோம் என ஆடம்பரத்தில் ஆடி, கடைசியில் வேலைக்கு செல்லாமல் சோம்பேறிகளாகவே இருப்பர்.
கடக ராசி: அது போல் கடக ராசிக்காரர்களுக்கு இந்த வைரமானது ஆணவத்தை உருவாக்குகிறது. இதனால் மக்களிடம் அவர்களின் நடத்தை மாறுகிறது. இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படும்.
சிம்மம்: வைரமானது இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்புடையது அல்ல. இந்த வைரத்தை அணிந்தால் இவர்களுக்கு நிதி இழப்பீடு ஏற்படும். எதிலும் தோல்விதான். வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். நிம்மதி தேவை என்றால் வைரம் இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்து படுத்துவிடாதீர்கள்.
தனுசு: அது போல் தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த வைரம் பொருந்தாது. இதை அணிவதை தவிருங்கள். எனவே வைரத்தை அணிய விரும்பினால் உங்கள் வாழ்க்கைக்கு அது ஏற்றதாக இருக்குமா இல்லையா என்பதை அறிந்து கொண்டு வாங்கலாம். அதைவிட்டுவிட்டு ஆடம்பரத்திற்காக வாங்கிவிட்டு பின்னர் வாழ்க்கையில் அவதிப்பட வேண்டாம்.
இந்த 6 ராசிக்காரர்களை தவிர்த்து ஏனைய ராசிக்காரர்களான கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார்கள்.
பொறுப்பு துறப்பு- இந்த வைரங்கள் எந்த ராசிக்கு ஆகும், ஆகாது என்பதெல்லாம் ஜோதிடம், வாஸ்துவில் படித்ததை பகிர்ந்து கொள்கிறோம். இதை நம்புவதும் நம்பாததும் அவரவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறோம்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications