எந்த ராசிக்காரர்கள் ரொம்ப ரொம்ப பாவம் தெரியுமா? அதுவும் இந்த ராசி ஈஸியா ஏமாந்துடுவாங்களாம்.. அப்பாவி
சென்னை: எந்தெந்த ராசிக்காரர்கள் ஆன்மீக பற்றாளர்கள், எந்தெந்த ராசிக்காரர்கள் பிறரிடம் ஏமாறக்கூடியவர்கள் என்பது குறித்தெல்லாம் ஜோதிடத்தில் கணித்து சொல்லப்பட்டிருக்கிறது.
கடக ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும்.. கடவுள் நம்பிக்கையை அபரிமிதமாக கொண்டவர்கள்... எப்போதுமே தியானம் செய்வதிலும், இறைவனை வேண்டுவதிலுமே தங்களது நாட்களை கழிக்க விரும்புவார்கள்.. அந்தவகையில், கடக ராசிக்காரர்கள் சிறந்த பக்திமான்களாக கருதப்படுகிறார்கள்.

கடவுள் சேவை: மீனம் ராசியுடையவர்களும், ஆன்மீகம் பற்று கொண்டவர்கள்.. கடவுளிடம் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம், பக்தியை வெளிப்படுத்துபவர்கள்.. கடவுளுக்கு சேவை செய்தே தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்களும்கூட. தனுசு ராசிக்காரர்களும், ஆன்மீக பற்றுள்ளவர்கள்.. தங்களது கடினமான நேரத்தை கடக்க இறைவழியை மட்டுமே நம்புபவர்கள்..
சிம்ம ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்கார்களும் இறைபக்தி நிறைந்தவர்கள்.. சாந்தமான மனநிலைமைக்கு சென்று, ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள்.. இதில் விருச்சிக ராசிக்காரர்கள், அர்ச்சகராகவோ அல்லது பூசாரியாகவோ கூட மாறிவிடுகிறார்கள்.. ஆனால், மிதுனம், மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், மகரம், கும்பம் போன்ற ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் மிகமிகத்தீவிரமாக ஈடுபட மாட்டார்களாம்..
இரக்க குணம் : அதேபோல, எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும், தன்னம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் சில சமயம் பிறரால் ஏமாந்துவிடும் அளவுக்கு இளகிய மனம் படைத்த ராசிக்காரர்களும் உண்டு.
பிறரை கண்டு இரக்கப்பட்டு, ஏமாளியாகும் அளவுக்கு செல்லக்கூடியவர்கள் மீன ராசிக்காரர்கள் என்கிறது ஜோதிடம்.. கண்மூடித்தனமாக எல்லாரையுமே மீன ராசிக்காரர்கள் நம்பிவிடுவார்களாம். இதனால், பிறரால் அதிகம் மனம் புண்படக்கூடியவர்களும் இவர்கள்தான்.
ஒவ்வொருமுறையும் மனம் புண்பட்டதுமே, இனிமேல் தன்னை ஏமாற்றியவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தாலும், மறுபடியும் எல்லாவற்றையும் மறந்து, தன்னைப் புண்படுத்தியவர்களை மன்னித்து, அவர்களது நல்ல குணத்தை மட்டும் பார்த்து மறுபடியும் பழகி, மறுபடியும் ஏமாந்து விடுவார்களாம்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களும் பிறரை அதிகமாக நம்புவதுடன், இரக்க குணம் உடையவர்கள்.. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற குழப்பத்துடனேயே இருப்பதால், பிறரால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். எனினும், இதற்கான காரணத்தை அலசி ஆராயக்கூடிய மனப்பக்குவம் உடையவர்கள்.
மேஷ ராசிக்காரர்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள், உறுதியான தன்மைக்கு பெயர் பெற்றவர்கள்... காதலில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள். காதலித்து ஏமாந்தாலும், காதலின் மீது நம்பிக்கைகளை எப்போதுமே இவர்கள் இழப்பதில்லை.. அதனால், காதலில் விழுந்து ஏமாந்தாலும், காதல் தோல்வியடைந்தாலும், உள்மனம் சொல்வதை எப்போதுமே கேட்பதில்லை.
தனுசு ராசிக்காரர்கள் புத்திசாலிகள் என்றாலும், அப்பாவிகளாக இருப்பார்கள். எல்லாரையும் எளிதில் நம்பி அனுதாபம் பார்க்கக்கூடியவர்கள்.. எல்லாரும் நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்த்தாலும், அப்படி இவர்களுக்கு அமைவதில்லை.. எனவே, தன்னை சுற்றி இருப்பவர்களிடம் எப்போதுமே இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அன்பு, பாசம்: கடக ராசிக்காரர்களும் பிறரை எளிதில் நம்பி ஏமாறக்கூடியவர்களே.. காதல் தோல்வி அல்லது வேறு ஏதாவது ஒரு விவகாரத்தில் தோல்வியுறும்போதுதான், எந்த அளவுக்கு பிறரிடம் ஏமாந்து போனோம் என்று யோசிப்பார்கள்.. இதற்கெல்லாம் அவர்களை முழுமையாக நம்பியதுதான் பிரதான காரணம் என்பதையும் உணர்வார்கள். ஆனாலும் யார் காயப்படுத்தினாலும், மீண்டும் அவர்களுடன் அன்பு செலுத்தி உறவை நீட்டிக்கவே விரும்புவார்களாம்.
மிதுன ராசிக்கார்கள், அனைவருடன் நட்பு ரீதியாக பழக விரும்புவர்கள்.. ஆனால், சில சமயங்களில் மற்றவர்களின் கருத்துக்களால் இவர்கள் திசை திருப்பப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.. தவறான தகவல்களால் மனம் மாறக்கூடியதற்கும் வாய்ப்புள்ளது.. அதனால், மற்றவர்கள் எது சொன்னாலும், அதை நம்பும்போது மட்டும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications