புதிய கட்டடங்களுக்கு பச்சை நிற வலை போடுவது ஏன் தெரியுமா?
சென்னை: புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பச்சை நிற வலை போர்த்துவது எதற்காக என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் பல்வேறு தகவல்களை பார்ப்போமா? இதே போல் மாடித் தோட்டங்களிலும் இது போல் வலை போடப்பட்டிருக்கும்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பச்சை நிற வலை போர்த்துவது எதற்காக?.

முக்கியமாக இது அந்தக் கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வெளியில் நடப்பதைக் கவனிக்க நேர்ந்தால் கவனக்குறைவாக கீழே விழ நேரிடலாம். விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.
அதிகமான சூரிய வெளிச்சம் கட்டிடத்தினுள் விழுவது அங்கு பணிபுரிபவர்களை விரைவில் சோர்வடையச் செய்யும். இதனைத் தவிரக்கும் விதமாகவும் இவ்வித மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது .
மேலும் வெளியில் நடப்பதை கட்டிட வேலையாட்கள் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் வேலையில் குறைபாடு மற்றும் வேலையில் தாமதம் ஆகியனவும் நேரிடும்!
அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கை இது. கட்டிடத்திலிருத்து வெளியேறும் தூசி போன்றவற்றிலிருந்து பக்கத்து கட்டிடத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இவ்விதம் வலை அமைப்பு கட்டிடத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுகிறது.
கட்டிடத்திலிருந்து வெளியே விழ நேரும் சிறு சிறு கற்கள் போன்றவற்றால் தெருவில் நடந்து போகின்றவர்களைக் காக்கும் நடவடிக்கையும் இது.
கட்டிடத்தின் வெளிப்பூச்சு சமயம் சிமென்ட் கலவை அடுத்த கட்டிடத்தின் மீது விழுவதைத் தடுப்பதற்காகவும் பெயிண்ட் அடிக்கும்போது பக்கத்து கட்டிடத்தின்மீது சிதறாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது. இவைகள் வலையினுள்ளேயே தங்கிவிடும்.
கட்டிடம் முடியும் வரை மற்றவர்களின் கண்ணேறு (திருஷ்டி) கட்டிடத்தின் மீது படுவதைத் தடுப்பதற்காகவும் இவ்விதம் கட்டிடத்தைச் சுற்றிலும் பச்சை நிற வலையமைப்பு ஏற்படுத்துகின்றனர்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications