கால் விரல்களில் பெண்கள் மெட்டி அணிவது ஏன்? அய்யோ! இத்தனை சயின்டிஃபிக் விஷயங்கள் இருக்கின்றனவா?
சென்னை: பெண்கள் கால் விரல்களில் மெட்டி அணிவது ஏன் தெரியுமா? அதிலும் வெள்ளியில்தான் அணிய வேண்டும்.
திருமணமான பெண்களுக்கு கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் அதே நேரத்தில் கால் விரல்களில் மெட்டி அணிவது உண்டு, ஒவ்வொரு குடும்பத்தினரின் வழக்கப்படி, முதலில் காலில் செம்பு மெட்டியை அணிவர்.

பிறகு 3 மாதம் ஆனதும் திருமாங்கல்யத்தை பிரித்து நிறைய உருப்படிகளுடன் வேறு மஞ்சள் கயிற்றிலோ அல்லது தங்க தாலி சரடிலோ கோர்ப்பது நம் வழக்கம். அப்போது வெள்ளி மெட்டியை போட்டுவிட்டு பழைய செம்பு மெட்டியை எடுத்துவிடுவார்கள்.
சிலர் கால் விரல்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மெட்டி அணிய மாட்டார்கள். கழுத்தில் திருமாங்கல்யம் மட்டும் அணிந்திருப்பார்கள். இதை பெரியவர்கள் ஒரு குறையாகவே சொல்வதுண்டு. சரி கால் விரல்களில் மெட்டி அணிவது ஏன் தெரியுமா? வெள்ளியில் மெட்டி அணிவதால் அந்த உலோகத்தில் இருக்கும் ஒரு வித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும்.
கர்ப்பப்பை நோய்களை இந்த மெட்டி கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள். கால் கட்டை விரலுக்கு அடுத்து இருக்கும் இரண்டாவது விரலில்தான் மெட்டியை அணிய வேண்டும். இதனால் கர்ப்பப்பையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இந்த மெட்டி போடுவதால் கர்ப்பமாக இருக்கும் போது அந்த பெண்ணுக்கு வாந்தி, மயக்கம் போன்றவை குறைவாக ஏற்படும்.
சுருக்கமாக சொல்ல போனால் கால் விரலில் அணியும் மெட்டி பெண்ணின் உடலுக்கு நல்லது. அதுபோல் சில பெண்கள் பில்லாலி, என்ற மெட்டியை அணிவர். அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் 3ஆவது விரலில் அணியும் போது புள்ளிகள் தூண்டப்பட்டு பால் அதிகமாக சுரக்கும். இதனால்தான் இந்த மெட்டியை அணிவர்.
கால் விரல்களில் எல்லா நரம்புகளும் இருக்கின்றன. அதாவது இதயம் முதல் மூளை வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு உள்ளது. இந்த மெட்டி சப்தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கேட்கும் என்பார்கள். மேலும் காலில் உள்ள கர்ப்பப்பை தொடர்புடைய நரம்புகள் அழுத்தப்பட்டு சுக பிரசவம் ஆகும்.
கால்களில் வெள்ளி மெட்டியை அணிவது பெண்களுக்கு இயற்கையிலேயே பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். ஒரு வேளை மெட்டி தேய்ந்துவிட்டால் அதை தூக்கி போட்டுவிடக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து அந்த மெட்டியையே உருக்கி, தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் வெள்ளி சேர்த்து புதிய மெட்டியை அணியலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications