அட்சய திருதியை 2024: நாளை தங்கம் வாங்க நல்ல நேரம் எது? கோல்டை தவிர வேறு என்னவெல்லாம் வாங்கலாம்?
சென்னை: நாளை அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்கம் வாங்குவது எந்த நல்ல நேரத்தில் தங்கம் வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். இருக்கப்பட்டவர்கள் தங்கம் வாங்குவர். இல்லாதவர்கள், தங்களால் இயன்ற பொருளை வாங்கலாம்.

பலர் நிலம், வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்குவது வழக்கம். அது போல் சிலர் கல் உப்பை கூட வாங்கி வைப்பர். இதுவும் லட்சுமி கடாட்சம்தான். அந்த வகையில் அட்சய திருதியை என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கும் என்பார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் எல்லோராலும் தங்கம் வாங்க முடியாது.
இதற்காக உப்பு, அரிசி, ஆடைகள், சிறிய பாத்திரம் உள்ளிட்டவைகளில் எது வேண்டுமானாலும் வாங்கலாம். அது போல் பெண் பார்க்க செல்வது, நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை இந்த நாளில் செய்வது நல்லது. அட்சய திருதியை அன்று தானம் கொடுப்பதும் நல்லது.
ஆடை எனப்படும் வஸ்திர தானமாக இருக்கலாம். அன்னதானம் கொடுப்பதும் சிறப்புதான். இத்தனை சிறப்புகளை கொண்ட அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி, அதாவது நாளை அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும்.
அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் சுபமுகூர்த்தம் உள்ளன. அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சிறிய முகூர்த்தங்கள் உள்ளன. இந்த நேரங்களில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications