அறிவோம் ஐயப்பன் யாத்திரை 4: சபரிமலையில் யாத்திரை பக்தர்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் எவை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சபரிமலையில் மலையேறும் போது ஐயப்ப பக்தர்கள் என்ன என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என கோவில் நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் இவை:

sabarimala

- ஒவ்வொரு பத்து நிமிடங்கள் மலை ஏறும்போதும் ஐந்து நிமிடம் ஓய்வு எடுக்கவும்.

- பரம்பரைப் பாதை வழியைப் பயன்படுத்தவும்-மரக்கூட்டம், சரம்குத்தி, நடப்பந்தல், சன்னிதானம்

- பதினெட்டாம் படியை அடையும்போது வரிசைமுறையைப் பின்பற்றவும்.

- திரும்பி வரும்போது நடைப்பந்தல் மேம்பாலத்தைப் பயன்படுத்தவும்.

- மலம், சிறுநீர்க்கழிக்க கழிப்பறைகள் பயன்படுத்தவும்

- பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு அவசரப்படாமல் பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கிச் செல்லவும்.

- டோளியைப் பயன்படுத்துவோர் அதற்கான கட்டணத்தை தேவஸ்வம் மையங்களில் செலுத்தி, அதற்கான ரசீதைப் பாதுகாத்துக்கொள்ளவும்.

- பரிசோதனை மைய அலுவர்களுடன் ஒத்துழைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.

- சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டால் காவலர்களைத் தெரியப்படுத்தவும்.

- உரிமம் பெற்ற கடைகளிலிருந்து மட்டுமே உணவு முதலான பொருட்களை வாங்கவும்.

- பம்பை, சன்னிதானம் போன்ற இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

- குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.

- குப்பைக்கூளங்களை அதற்குரிய பெட்டிகளில் மட்டுமே இடவும்.

- தேவைப்பட்டால் மருத்துவ வசதிகளையும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) மையங்களை அணுகவும்.

- குழந்தைகள், முதியோர், மாளிகைப்புறங்கள் (பெண் குழந்தைகள்) ஆகியோர் பெயர், முகவரி, தொடர்பு எண் குறிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கழுத்தில் அணிவது நல்லது.

- உடன் வந்த பக்தர்களில் யாரேனும் குழுவிலிருந்து விலகிச் சென்றுவிட்டால் உடனடியாக காவல் மையங்களில் தெரியப்படுத்தவும்.

- கோயில் வளாகத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.

- பம்பையிலும் சன்னிதானத்திலும் வழியிலும் புகைபிடித்தல் கூடாது.

- மதுவோ போதைப் பொருட்களோ பயன்படுத்தக் கூடாது.

- வரிசை மீறுதல் கூடாது.

- வரிசையில் நிற்கும்போது இடித்து நெருக்கவேண்டாம்

- எவ்விதமான ஆயுதங்களோ வெடிப்பொருட்களோ எடுத்துச் செல்லக்கூடாது.

- உரிமம் இல்லாத கடைக்காரர்களை/ வியாபாரிகளை அணுகவேண்டாம்.

- கழிப்பறைகளுக்கு வெளியே மலம், சிறுநீர் கழிக்கக் கூடாது.

- எந்த சேவைக்கும் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது.

- தேவைகள் ஏற்பட்டால் காவல் மையங்களை அணுகத் தயங்கவேண்டாம்.

- ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் அல்லாமல் குப்பைக் கூளங்களை கண்ட இடங்களில் வீசி எறியக்கூடாது.

- பதினெட்டாம் படியில் தேங்காய் உடைக்கக் கூடாது.

- பதினெட்டாம் படியின் இருபக்கங்களிலும் உள்ள குறிப்பிட்ட இடங்களில் அல்லாமல் பிற இடங்களில் தேங்காய் உடைக்கக் கூடாது.

- பதினெட்டு படிகள் ஏறும்போது முட்டால் இழைந்து செல்லக்கூடாது.

- திரும்பி வரும்போது நடைப்பந்தல் மேம்பாலத்தின் வழியாக அல்லாமல் வேறு வழிகளைப் பயன்படுத்தவேண்டாம்.

- மேல் திருமுற்றத்திலோ, தந்திரி நடையிலோ இளைப்பாறுவதைத் தவிர்க்கவேண்டும்.

- கீழ் திருமுற்றம் மற்றும் நடைப்பந்தல் வழிகளில் விரி விரிக்கக்கூடாது.

- வாணவெடிகள் மத்தாப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

- ஆயுதங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

- சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, ஸ்டவ் போன்றவை பயன்படுத்தக்கூடாது.

- தீயைப் பயன்படுத்தத் தேவையிருந்தால், தேவைக்குப்பின் உடனடியாக அணைத்துவிட வேண்டும்.

- பதினெட்டாம்படி ஏறுவதற்கு முன் உங்களையோ, உங்கள் உடைமைகளையோ பரிசோதனைக்கு வேண்டினால் ஒத்துழைக்கவும். மறுத்தல் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+