எருக்கன் இலை.. எருக்கஞ்செடியின் மகிமை.. வெற்றி, மகிழ்ச்சியை தரும் எருக்கன் இலையின் 1 ரூபாய் பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளெருக்கு செடியின் இலை, பூ, பட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை. இறைபூஜைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.. சூரிய பகவானின் தன்மையையும், சிவபெருமானின் அம்சமாகவும் இந்த வெள்ளை எருக்கஞ்செடியின் பூக்கள் கருதப்படுகின்றன. அந்தவகையில், எருக்கன் இலையை வைத்து செய்யக்கூடிய 2 பரிகாரங்களை பார்ப்போம்.

சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடியது என்பதால், சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது இந்த வெள்ளெருக்க பூக்கள்தான். விநாயகருக்கும் இந்த வெள்ளெருக்கு பூவிலேயே மாலைகட்டி வழிபடுவார்கள். வறுமை நீங்க வேண்டும் என்பதற்காகவே, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, எருக்கம் பூமாலையை விநாயகருக்கு அணிவிக்கிறார்கள்.

spirituality erukkan leaf pariharam

வெள்ளெருக்கு: வெள்ளெருக்கு பட்டைகளில் செய்யப்பட்ட திரியை வைத்து தீபம் ஏற்றி வழிபடும்போது, எதிர்மறை சக்திகள் நுழைவது தடுக்கப்பட்டு விடும். எருக்கஞ்செடியை வீடுகளில் சுத்தமாக வைத்து பராமரித்தால் மட்டுமே வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த செடியை சிவன் கோயிலில் நட்டு வைத்துவிடலாம்..

அதேபோல, வெள்ளை எருக்கன் இலைகளை வைத்து எளிய பரிகாரங்கள் செய்யலாம். அல்லது வெறுமனே எருக்கன் இலையில் இப்பரிகாரம் செய்யலாம். உடல்நலம் குறைபாடு, பண பிரச்சனை, கடன் பிரச்சனை, சொத்து பிரச்சனை, வீடு பிரச்சனை, தொழில் பிரச்சனை, முன்னேற்றத்தில் தடங்கல்கள் இருந்தால், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதிலும், மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பரிகாரம்: ஒரேயொரு எருக்கன் இலையை, மஞ்சள் நீரில் சுத்தமாக கழுவி, சிவப்பு நிற மையால் உங்களது ஏதாவது ஒரு பிரச்சனையை எழுத வேண்டும். பிறகு சாம்பிராணி கரண்டியில் இலையை வைத்து, அதன்மீது வேப்ப எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 சொட்டு ஊற்ற வேண்டும். பின்னர் அதன் மீது ஒரு கற்பூரத்தை வைத்து, வீட்டிற்கு வெளியில் கொண்டுவந்து ஏற்ற வேண்டும். கற்பூரம் எரிந்து முடிக்கும்வரை உங்கள் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.

அதேபோல இன்னொரு பரிகாரத்தையும் செய்யலாம்.. எருக்கன் இலையை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி, அதற்கு சந்தனம் பூச வேண்டும். விபூதியால் 3 பட்டைகளை போட வேண்டும். இதில் நடுபட்டையில் குங்குமத்தையும், பட்டைக்கு மேலும் கீழும் 3 குங்கும பொட்டையும் இலையின் நடுப்பகுதியில் வைக்க வேண்டும். பிறகு பட்டைக்கு நடுவில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதற்கும் சந்தனம் குங்குமம் இடவேண்டும்.

மஞ்சள் துணி: இந்த எருக்கன் இலையின் காம்பு இருக்கும் பகுதி, விநாயகரை பார்த்தபடியும், நுனிப்பகுதி நம்மை பார்த்தபடியும் வைக்க வேண்டும். இப்போது இலைக்கும், விநாயகருக்கும் நடுவில், நல்லெண்ணெய் ஊற்றிய தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இறுதியாக, அந்த ஒரு ரூபாய் நாணயத்தோடு எருக்கன் இலையையும் சேர்த்து மடித்து, ஒரு மஞ்சள் துணியில் வைத்து கொள்ளலாம்.

இதனை முக்கிய காரியங்களுக்காக வெளியில் செல்லும்போது எடுத்து செல்லலாம். வாரம் ஒருமுறை இப்படி செய்துவரும்போது, நாம் முன்னெடுக்கும் காரியங்களில் தடங்கல் நீங்கி வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+