உணவு சாப்பிடும் போது இடது தொடையில் கை வைத்து சாப்பிடுகிறீர்களா?
சென்னை: சாப்பிடும் போது இந்த தவறை எல்லாருமே செய்வார்கள். ஆனால் அதை செய்யவே கூடாது என்கிறது சாஸ்திரம்.
சாஸ்திரம், சம்பிரதாயம் என்பது நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஒன்று. இதில் நம்பிக்கை இருப்பவர்கள் பின்பற்றுவார்கள். ஒவ்வொரு செயலுக்கும் சாஸ்திரத்தில் இதை செய்யலாம், செய்யக் கூடாது என்பவை உள்ளன.

அந்த வகையில் சாப்பிடும் போதும் சில சாஸ்திரங்களை பின்பற்றுதல் நலம். சாஸ்திரங்கள் என்பது தூய்மைக்காக வைக்கப்பட்ட ஒன்று என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் சாப்பிடும் போது ஈரத்துணியை அணிந்து கொண்டு உணவு சாப்பிடக் கூடாது. அது போல் தலையை விரித்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. அது போல் ஈரத்தலையுடன் சாப்பிடவே கூடாது. துக்க சம்பவத்தின் போதுதான் ஈரத்தலையுடனும் தலையை விரித்தபடியும் உண்பார்கள் என்பது உண்டு.
அது போல் சாப்பிடும் போது உருண்டையாக உருட்டி உருட்டி சாப்பிடவே கூடாது. மேலும் சாப்பாட்டை உருண்டைகளாக பிரித்து வைத்தல் கூடாது. இது போல் உருண்டை பிடிப்பது, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போது பிண்டம் பிடிப்பதை போல் இருக்கும். அதனால் அது போல் உருண்டை உருட்டவே கூடாது.
அது போல் கையை தரையில் ஊன்றி சாப்பிடுதலும் கூடாது. மடியில் தட்டை வைத்துக் கொண்டு சாப்பிடுதல் மிகவும் தவறு. இடது தொடையின் மீது கையை ஊன்றியபடி சாப்பிடக் கூடாது. மனையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். அது போல் எவர்சிலவர், வெள்ளி, தங்கத் தட்டுகளில் (வசதியிருந்தால்!) சாப்பிடலாம்.
ஆனால் எக்காரணத்தை கொண்டு இரும்பு தட்டுகளில் உணவை உட்கொள்ளுதல் கூடாது. சாப்பிடும் போது சாமியே கூப்பிட்டாலும் எழுந்து செல்லக் கூடாது என்பார்கள். எல்லாவற்றுக்கு மேல் உணவை வீணாக்கவே கூடாது. சாப்பாடு இருக்கும் போது தட்டில் தண்ணீரை ஊற்றக் கூடாது. தட்டில் சாப்பாடு இருக்கும் போது தூக்கி வீசக் கூடாது. அது போல் அவசர அவசரமாக சாப்பிடுதல் கூடாது, எந்த உணவையும் விழுங்கி விழுங்கி சாப்பிடுதல் கூடாது. சாப்பிடும் போது தண்ணீரை முதலில் கொடுக்க வேண்டும்.
அது போல் சாப்பாடு பரிமாறும் போது தண்ணீரை முதலில் கொடுக்க வேண்டும். பிறகுதான் உணவை வைக்க வேண்டும். உணவு உண்ணும் போது இத்தனை சம்பிரதாயங்களை பின்பற்றியுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் பார்க்கும் சிலர் தட்டை மேலே வைத்து சாப்பிட்டால் நாம் குனிந்து சாப்பிடும் தூரம் குறையும்.
இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் வாய்ப்புள்ளது. மேலும் குனிந்து சாப்பிடும்போதுதான் தொப்பை விழாது. அது போல் கையை ஊன்றி சாப்பிட்டால் தரையில் இருக்கும் அழுக்குகள் கையில் ஒட்டிக் கொண்டு அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
-
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications