இறந்தவர் வீட்டுக்குள் வர்றாராமே.. இந்த பூச்சியை மட்டும் விரட்டாதீங்க.. குடும்பத்தில் இதுவே மகிழ்ச்சி
சென்னை: விலங்குகள், பூச்சிகள், பறவைகள் குறித்தெல்லாம்கூட, சாஸ்திரங்களில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளன.. அதிலும், பறவைகளின் வருகையை வைத்துக்கூட அந்த வீட்டின் அதிர்ஷ்டமும், அபாயமும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 வகைகளை பற்றி பார்ப்போம்.
வீட்டிற்குள் சில வகையான பறவைகள் வந்தால் நல்லது என்றும், சில பறவைகள் வீட்டுக்குள் வருவது அபசகுணம் என்றும் சொல்வார்கள்.. உதாரணத்துக்கு சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் காகம், நம்முடைய வீட்டிற்கு வந்தால் மிகவும் நல்லது என்பார்கள்..

புறாக்கள்: அதேபோல, சமாதான பறவையான புறாக்கள் வீடுகளுக்குள் வந்தால், வீட்டில் நிலவும் கஷ்டங்கள் மொத்தமாக நீங்கிவிடுமாம். மஹாலக்ஷ்மியின் வாகனமான ஆந்தைகள் வீட்டிற்குள் வந்தாலும், வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகமாகும்.. மகாவிஷ்ணுவின் வாகனமான கழுகுகள், வீட்டிற்கு வந்தாலும் மிகவும் அதிர்ஷ்டம் என்பார்கள்.
ஆனால், வவ்வால்கள் வீட்டிற்குள் நுழைவது அபசகுணமாக பார்க்கப்படுகிறது.. வீட்டின் நல்வாழ்வு பாதிப்பதுடன், நிதிநிலைமையும் மோசமாகிவிடுமாம்.. அதேபோல, கழுகுகள் வீடுகளில் நுழைவதும், இந்து மத நம்பிக்கைப்படி அசுபமாக கருதப்படுகிறது.
பட்டாம்பூச்சி: அந்தவகையில், பட்டாம்பூச்சி வீட்டிற்கு வருவது நல்லதா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.. நம்முடைய வீட்டில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், அவர்கள் பட்டாம்பூச்சியின் வடிவமாக, வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது.. அதாவது, உங்கள் வீட்டில் இறந்தவர்கள், பட்டாம்பூச்சி வடிவத்தில் தெய்வமாக இருந்து உங்களை ஆபத்திலிருந்து காப்பார்களாம். எனவே, பட்டாம்பூச்சி வீட்டிற்குள் வருவதால், பயப்பட தேவையில்லை.
அதிலும், மஞ்சள் வண்ண நிற பட்டாம்பூச்சிக்கள் பொருளாதார நிலையையும் செல்வ வளத்தையும் அதிகரிக்க செய்யுமாம்.. பச்சை நிற வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால், அது ஆரோக்கியத்தினை மேம்படுத்துமாம்.
வண்ணத்துப்பூச்சி: வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால், திருமண தடைகள் விலகி, சுப காரியங்கள் சீக்கிரத்தில் நடைபெறும்.. அதேபோல, விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்பதையும் பட்டாம்பூச்சிகள் உணர்த்துமாம்.. நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஏதோ ஒரு நல்ல விஷயத்தை சொல்வதற்காகவே பட்டாம்பூச்சியின் வடிவத்தில் வீட்டிற்குள் வருகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.
அதேபோல, தட்டான் பூச்சிகள் குறித்தும் சந்தேகம் எழலாம்.. மழைக்காலங்களில், ஈரப்பதம் உள்ள இடங்களில் இந்த தட்டான்பூச்சிகளை நாம் அதிகமாக காணலாம்.. அதனால் வீடுகளுக்குள் அவ்வளவாக இந்த பூச்சிகள் வருவதில்லை.. ஒருவேளை வீட்டின் வாசலில் ஈரப்பதம் இருந்தால் இந்த தட்டான்பூச்சிகள் வரலாம். அப்படி வந்தாலும், அதனால் நன்மைதான் கிடைக்குமாம்.
நன்மைக்கே: முக்கியமாக, உங்கள் பணியில் அல்லது தொழிலில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால், அவை மெல்ல மெல்ல தீர்ந்துவிடுமாம்.. எனவே, தட்டான்பூச்சிகள் வீட்டுக்குள் வருவது நன்மைக்குதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications