மோதிரத்தை தங்கத்தில் விரலில் ஏன் அணியனும் தெரியுமா? யானை முடி மோதிரத்தில் இத்தனை பலனா? நகைகள் நன்மை
சென்னை: ஒவ்வொரு விரலும் நம்முடைய இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களாம்.. அந்தவகையில், மோதிர விரலில் ஏன் மோதிரங்களை அணிய சொல்கிறார்கள் தெரியுமா? யானை முடி மோதிரம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தங்கம், வெள்ளி நகைகளை அணிய காரணம் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நம்முடைய உடம்பில் ஏராளமான வர்ம புள்ளிகள் உள்ளன.. தங்கத்தில் நகைகள் அணிவதன் மூலம், உடலிலுள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுகின்றன.. இதனால் உடலிலுள்ள உறுப்புகள் பராமரிக்க முடிகிறது.. நோய்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன..

வெப்பத்தை குறைக்கும் தன்மை தங்கத்துக்கு உண்டு என்பதால் தங்கத்தில் ஆபரணம் அணிவதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.. இதற்கு அடுத்தபடியாக வெள்ளி, முத்து, பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கின்றன.
தங்கம் - நரம்பு - மூளை
தங்கத்தை போலவே உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெள்ளிக்கு உண்டு.. குதிகால் நரம்பில் கொலுசு அணியும்போது, மூளைக்கு செல்லும் உணர்ச்சிகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
தலைவலி, சைனஸ் போன்ற தொந்தரவுகளை சரிசெய்ய நெற்றியில் அணியும் நெத்திச்சுட்டி உதவுகிறது.. கண்களுடன் காது நரம்புகளும் இணைந்துள்ளதால், காதில் துளையிட்டு கம்மல் அணியும்போது, பார்வை தெளிவாகிறது.. மூளை திறன்பட செயல்படுகிறது..
முன் கைகளின் பகுதியிலுள்ள புள்ளிகளை வளையல்கள் அழுத்துகின்றன.. இதன்மூலம் உடலில் வெள்ளையணு உற்பத்தி அதிகமாகிறது.. காலில் கொலுசு அணிவதால், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கிட்னி போன்ற உறுப்புகள் சீராக செயல்படுகின்றன.
மூக்கின் புள்ளிகள் - மூக்குத்தி
மூக்கின் சில புள்ளிகளுக்கும், பெருங்குடல், சிறு குடலுக்கும் தொடர் உள்ளன. எனவே, மூக்குத்தி அணிவதால், பெருங்குடல், சிறுகுடல் நோய்கள் நீங்குகின்றன..
கழுத்தில் நகைகள் அணிவதால் தலையின் செயல்பாடுகள் சீராகின்றன.. கால் கட்டை விரலுக்கு அருகிலுள்ள விரல், கருப்பையுடன் நெருங்கிய தொடர்புடையது. அதனால் பெண்கள் மெட்டி அணியும்போது, கர்ப்பப்பை வளர்ச்சி ஏற்படும்.. இது தூண்டக்கூடியது.. பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. எனவே மோதிர விரலில் மோதிரம் அணியும்போது, இதயம், வயிறு பிரச்சனைகள் சரியாகின்றன..
மோதிர விரலில் மோதிரங்கள்
மோதிர விரலில் மோதிரம் அணிவதால் அந்த இடத்திலுள்ள நரம்பு இதயத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால், இதயநோய், வயிற்று கோளாறுகள் முன்கூட்டியே வராமல் தடுக்கப்படுகின்றன.. ஆண், பெண் இனவிருத்தி உறுப்புகளுக்கு கூடுதல் பலத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த விரல் இதயத்தோடு சம்பந்தப்பட்டதால், என்றும் உங்கள் துணை உங்கள் இதயத்தில் இருப்பார் என்றும் சொல்வதுண்டு.
யானை முடி மோதிரம்
தங்கம் வெள்ளி மட்டுமல்லாமல், யானை முடியிலும் மோதிரம் அணியலாம்.. வாழ்க்கை மேம்பட உதவுவதற்கு யானை முடி மோதிரம் தரும் நன்மைகள் ஏராளம். யானை முடி அணிவதால், சுற்றியுள்ள துர்சக்திகள், தீய அதிர்வலைகள் விலகும்.. கண்திருஷ்டியை போக்க யானை முடி சிறந்த ஆபரணமாகும்.. பில்லி, சூனியம், மாந்த்ரீகம் போன்றவற்றினால் ஏற்படும் தாக்கங்களை யானை முடி மோதிரம் தடுக்கக் செய்கிறது..
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications