மாறி மாறி வீட்டில் உடம்பு சரியில்லாமல் போகுதா? இதை முதல்ல தவிருங்கள்! ஆரோக்கியத்துக்கு வாஸ்து டிப்ஸ்
சென்னை: நாம் குடியிருக்கும் வீட்டில் நோய் நொடியில்லாமல் எப்போதும் ஆரோக்கியம் தழைக்க வேண்டும்.. இல்லாவிட்டால், ஒட்டுமொத்த நிம்மதியும் குலைந்துவிடும்... வீட்டில் உள்ளவர்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது... யாராவது நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தால் , இதற்கு வாஸ்து குறைபாடுகளே காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். அந்தவகையில், குடும்பத்தினர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
வீடுகளில் பல பேர் காரணமே தெரியாமல், அடிக்கடி உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாவார்கள்.. இதனால் ஆரோக்கியம் கெட்டு, பணம்தான் விரயமாகும்.. எனவே, உடல்நல குறைபாடுகள் ஏற்படாதவாறு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

திசைகள் குறைபாடு
ஏனென்றால், தெற்கு பகுதியில் தவறு இருந்தால், பெண்களின் உடல் நலம் கெடும், குறிப்பாக கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பார்கள்.. ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள், குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
தென்மேற்கு பகுதியில் தவறாக அமைந்தால், கல்லீரல், கணையம், முதுகு தண்டுவடம், பாலின உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும். ஆண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும்..
மேற்கு மற்றும் வடமேற்கு தவறாக இருந்துவிட்டால், எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை வரலாம்.. முழங்கால் மூட்டு பிரச்சனைகள், மனநலம் பாதிப்பு, கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கருப்பையையே அகற்ற வேண்டி வரலாம். எனவே, வீடுகள் கட்டும்போதே வாஸ்து நிபுணர்களின் ஆலோசனையை பெற்று கட்டுவது அவசியம்.
வைட்டமின் குறைபாடு
ஒவ்வொரு வீடும் கிழக்கிலிருந்து சூரிய ஒளி பெறும் வகையில் அமைந்திருப்பது நல்லது.. சூரிய ஒளி கிடைக்காவிட்டால், வைட்டமின் D பற்றாக்குறையினால் கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு ஆகியவைகளின் வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும்..
அதுமட்டுமல்ல, கிழக்கு திசையின் சூரிய ஒளியால் உருவாகும் வைட்டமின் D சத்துக்களினால் ஆணின் விந்து சந்தி அதிகரிக்கும். மேலும், குழந்தைகளுக்கு அதிகாலை சூரிய ஒளி உடல் வளர்ச்சியையும் எலும்புகள் வளர்ச்சி அடையவும், கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படாமலும் தடுக்கிறது. எனவே, ஒவ்வொரு வீடும் கிழக்கிலிருந்து சூரிய ஒளி பெறும் வகையில் அமைதல் வேண்டும்.
வீட்டின் மையப்பகுதி
நம்முடைய வயிறு, உடலின் நடுப்பகுதியாக உள்ளது... வயிறு உபாதைகள் எதுவும் நெருங்காமல் இருக்க வேண்டுமானால், வீட்டின் நடுப்பகுதி அமைப்பு கழுவி சுத்தமாக இருக்க வேண்டும்..
பெரும்பாலான வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமே, வீட்டின் நடுப்பகுதியில் குழாய் துளை போடுதல், ஜெனரேட்டர் வைத்தல், இன்வெர்ட்டர் வைத்தல், மாடிப்படிகள், கழிவறைகள் அமைந்திருப்பது போன்றவைதான்.. வீட்டின் நடுப்பகுதியில் டைனிங் டேபிள் போட்டு தவிர வேறு எதையுமே வைக்கக்கூடாது..
கிச்சன் பொருட்கள்
வீட்டின் தென்கிழக்கு திசையானது வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்க செய்யும்.. தென்மேற்கு திசை குடும்பத்திலுள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தை கெடுக்க செய்யும்.. எனவே இந்த இரு திசைகளிலும், சாய்வு, பாதாள கூடாரம், வடிகால் அமைப்பு, விரிசல்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வடகிழக்கு திசையில் குப்பைத்தொட்டி, கழிவறை இருக்கக்கூடாது...
தூங்குதல் எப்பொழுதும் தெற்கு அல்லது கிழக்கு நோக்கிய திசையில் தூங்க வேண்டும். வடக்கில் தலை வைக்ககூடாது.. தென்மேற்கு திசையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் படுப்பது நல்லது. , கபம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் இடது புறமாக திரும்பி படுத்தும் தூங்கலாம்.. பித்த பாதிப்புகள் இருந்தால், வலதுப்புறம் படுத்து தூங்க வேண்டும்.
நிலத்தடி நீர்த்தொட்டி
ஜெனரேட்டர்கள் தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையிலும், நிலத்தடி நீர்த்தொட்டி தென்கிழக்கு பகுதியில் அமைக்கலாம்.. வீட்டின் தெற்கு புறமுள்ள சுவர் எப்போதும் மூடியிருக்க வேண்டும்.. தென்மேற்கு திசையில் கிச்சன் அமைக்கப்படாவிட்டால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய தொல்லைகள் ஏற்படும்.. கிச்சனில் மருந்து பொருட்களை வைக்கக்கூடாது..
தீபம் நெருப்பு திசையான தென் கிழக்கு திசையில் தான் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்... இதனால் வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியம் பெருகும்.. தெற்கு திசையில் அனுமானின் படத்தை வைத்து வழிபடலாம். வீட்டின் கதவுக்கு 2 பக்கமும் எலுமிச்சை, ஆரஞ்சு, போன்ற புளிப்பு நிறைந்த மரங்களை வைப்பதால், உடலில் ஆரோக்கியம் பெருகும்.
வீட்டில் தூண்கள் இருந்தால், அதற்கு கீழே உட்காரக் கூடாது.. அப்படி உட்கார்ந்தால் மன அழுத்தம், தலைவலி, நினைவிழப்பு ஏற்படுமாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications