கிச்சனில் ஸ்லாப்பில் சப்பாத்தி மாவு பிசையறீங்களா? சமையலறையில் பூரிக்கட்டையை இப்படி வெச்சிடாதீங்க
சென்னை: சப்பாத்தி மாவு பிசைவதில் இருந்து சப்பாத்தி கட்டை வாங்குவது வரை அனைத்துக்குமே வாஸ்து சாஸ்திரம் உள்ளது.. சமையலறையில் சப்பாத்தி செய்யும்போது சில விஷயங்களை கடைப்பிடித்தாலே, பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம் என்று வாஸ்துவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சப்பாத்தியை திரட்டுவதற்கு பயன்படும் பூரிக்கட்டை அல்லது சப்பாத்தி கல்லை வாங்க வேண்டுமானால், அதற்குரிய நாளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டுமாம். அதன்படி, சப்பாத்தி கல் மற்றும் கட்டையை புதன்கிழமைகளில் வாங்கினால் சிறப்பு என்கிறார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும், செவ்வாய், சனிக்கிழமைகளில் சப்பாத்தி கட்டையை வாங்க கூடாதாம்.

சப்பாத்தி கட்டை: ஒருமுறை சப்பாத்தியை திரட்டி விட்டால், அந்த சப்பாத்தி கட்டையை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும். சப்பாத்தி கட்டையில், மாவு தேங்கி கிடந்தாலோ அல்லது ஒட்டிக்கிடந்தாலோ, வீட்டிற்குள் பணம் வருவதில் சிக்கல் வரும்.. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் குறைபாடு வரலாம். அதனால், சப்பாத்தி கட்டையை எப்போதுமே கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல, சப்பாத்தி கட்டைகள் எப்போதுமே உடையாமல் இருக்க வேண்டும். லேசாக உடைந்திருந்தாலும் அதனை பயன்படுத்த வேண்டாம். சப்பாத்தி கட்டையை தலைகீழாக வைக்கக்கூடாது... முக்கியமாக அரிசி, கோதுமை மாவு இருக்கும் பாத்திரங்களின் மீதும் வைக்கக்கூடாது, இது குடும்பத்தில் வறுமையை பீடிக்க செய்துவிடும்.
சப்பாத்திகள்: சப்பாத்தி சுடும்போது அவைகளை எண்ணக்கூடாது என்பார்கள். எத்தனை சப்பாத்தி என்று எண்ணினால், வீட்டில் பொருளாதார நிலை மோசமாகிவிடுமாம். முதலில் சுடும் ரொட்டியை பசுக்களுக்கு தருவது மிகவும் நல்லது. அதேபோல, கடைசி ரொட்டியை நாய்க்கு தரவேண்டுமாம்.
சிலர் சப்பாத்தி கட்டை இல்லாமல், கிச்சன் ஸ்லாப்பிலேயே சப்பாத்தி திரட்டுவார்கள்.. அதனால், ஸ்லாப்களில் ஏதாவது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்..
ஸ்லாப்கள்: கிச்சன் ஸ்லாப் கிழக்கு நோக்கி இருந்தால், சப்பாத்தி மாவை கிச்சன் ஸ்லாப்பில் வைத்து திரட்டலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே ஸ்லாப்பை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சப்பாத்தி திரட்டலாம். அல்லது ஸ்லாப்கள் இருந்தாலும்கூட, அதன்மீது மரப்பலகையை வைத்து சப்பாத்தியை திரட்டுவது நல்லது.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications