நாளை விநாயகர் சதுர்த்தி! முழு முதற் கடவுளான பிள்ளையாருக்கு பூஜை செய்ய உகந்த நேரம் எது?
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில் பூஜை செய்ய நல்ல நேரம் எப்போது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஆவணி மாதத்தில் பூஜை செய்யப்படும். இதற்காக விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்வார்கள்.

விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை வைத்து மக்கள் வழிபடுவார்கள். மேலும் தெருக்களில் ஆங்காங்கே பெரிய பெரிய விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவை எல்லாம் குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்படும்.
விநாயகர் பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நாளை முதலில் அதிகாலையிலேயே எழுந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு வீட்டு வாசலிலும் சாமி இருக்கும் அறையிலும் மாக்கோலமிட வேண்டும். பின்னர் குளித்துவிட்டு பூஜை அறையில் மணையை வைத்து அதன் மேல் தலை வாழையிலையை வைக்க வேண்டும்.
அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு அதன் கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து தேவையான பூஜைப் பொருட்கள், அபிஷேக பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வரச் செய்து அதற்கு சந்தனம், குங்குமமிட்டு தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு இடுப்பில் துண்டு கட்டி பூமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம் மாலை அணிவித்து குன்றிமணியால் விநாயகரின் கண்களை திறக்க வேண்டும்.
பின்னர் பிள்ளையார் குடை வைத்து விளக்குகளை ஏற்றி பூஜையை தொடங்கலாம். கொழுக்கட்டை, சுண்டல், எள் உருண்டை உள்ளிட்டவைகளை வைத்து படைக்கலாம். விநாயகர் துதியை சொல்லி பூஜை செய்யலாம். விநாயகர் சிலையை அன்றைய தினமோ அல்லது ஒற்றை படையில் 3, 5, 7 ஆவது நாளோ விஜர்சனம் செய்ய வேண்டும்.
விநாயகர் வீட்டில் இருக்கும் வரை இரு வேளையும் பூஜை, நைவேத்தியம் செய்ய வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications