உங்க கடையில் பணப்பெட்டியை இந்த திசையில் வையுங்க.. ஆபீஸில் வைக்கக்கூடாத பொருள் இதுதான்: வாஸ்து டிப்ஸ்
சென்னை: நாம் குடியிருக்கும் வீடுகளுக்கு மட்டுமல்ல, தொழில் செய்யும் இடங்களிலும் வாஸ்து மிகவும் முக்கியம்.. தொழிற் கூடங்கள், நிறுவனங்கள் சிறப்பான முறையில் இயங்கி, பெருத்த லாபத்தை அடைய வேண்டுமானால், அதற்கு சரியான முறையில் வாஸ்து முறைகளை கடைபிடிக்க வேண்டும். அலுவலகம் அமையும் திசை, நாற்காலி போடப்படும், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை வாஸ்து விஷயங்களை நுட்பமாக பின்பற்ற வேண்டும் என்கிறார்கள்.
ஒரு அலுவலகத்தின் வாயில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்கலாம். வடக்கு திசை என்றால், நல்ல லாபம் கிடைக்கும்.. கிழக்கு திசையென்றால், தொழிலுக்கான யுக்திகள், நன்மைகள் கிடைக்கும்.
கிழக்கு பார்த்த கடைகளுக்கான கதவு என்பது வடகிழக்கில் வைத்திருக்க வேண்டும். கடையில் சாமி படம் வைக்கும்போது ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது.
அதேபோல, ஒரு அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவரின் அறை, தென்மேற்கு பகுதியில் எப்போதும் இருக்க வேண்டும்.. அதாவது, கிழக்கு அல்லது வடக்கு பக்கமாக தலைமை அதிகாரியின் நாற்காலி இருக்கலாம். இதில் வடக்கு திசையில் உட்கார்ந்து வேலை செய்வது வேலையில் முழு கவனத்தை செலுத்த உதவும்..
சிவப்பு, கருப்பு படிக்கட்டுகள்
அலுவலகத்தில் படிக்கட்டுகள் இருந்தால், அதை: மையத்தில் வைப்பதை தடுக்க வேண்டும்.. மையத்தில் படிக்கட்டுகள் இருந்தால், நிதி இழப்புகளுக்கு வழிவகுக்குமாம்.. அதுமட்டுமல்ல, சிவப்பு மற்றும் கருப்பு நிற படிக்கட்டுகளையும் அலுவலகத்தில் தவிர்க்க வேண்டும்.
அதேபோல, தலைமை அதிகாரியின் அறை, சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மேஜையையும் சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் பயன்படுத்தலாம்.. இது நேர்மறை ஆற்றலை அலுவலகத்துக்கு பெற்றுத்தரும். எக்காரணம் கொண்டும், வட்டமான அறை, வட்டமான மேஜையை பயன்படுத்தக்கூடாது.

ரிசப்ஷனிஸ்ட் - பணப்பெட்டி
அக்கவுண்ட் பார்ப்பவர், குபேரருக்குரிய வடக்கு திசையை நோக்கி அமர்ந்திருக்க வேண்டும். ரிசப்ஷனிஸ்ட் என்று சொல்லப்படும் வரவேற்பாளர்கள், வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமரலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள் தென்கிழக்கு, அல்லது வடமேற்கில் மீட்டிங் நடத்தலாம்.. எந்த நாற்காலியில் அமர்ந்தாலும், அது சற்று உயரமான நாற்காலியாக இருப்பது நல்லது.
அலுவலகத்தில் பணப்பெட்டியை வைப்பதற்கு வடக்கு அல்லது தென்கிழக்கு திசையை நோக்கி வைக்கலாம்.. குறிப்பாக, பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைப்பது பணவரவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், கழிப்பறைக்கு அருகில் இருக்கக்கூடாது பணப்பெட்டி இருக்கக்கூடாது.
கண்ணாடி - கடிகாரம்
அலுவலகத்தை எப்போதுமே சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.. சுத்தம் இருந்தாலே அங்கு மகாலட்சுமி குடிபுகுவாள்.. எனவே தினமும் அலுவலகத்தை துடைத்து சுத்தம் செய்வது நல்லது.
அலுவலகத்தில், வாஸ்து செடிகளை வளர்க்கலாம். உதாரணத்துக்கு மூங்கில் செடிகள் செழிப்பை உண்டாக்கி தரும்.. ஆனால், முட்செடிகள் வளர்த்தால், பணத்தட்டுப்பாடு, நஷ்டத்தை உண்டுபண்ணிவிடும். எந்த கண்ணாடி பொருட்களை பயன்படுத்தினாலும் அதை சிதையாமல் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.. கண்ணாடி பொருட்கள் விரிசல் விட்டிருந்தாலும், அதை பயன்படுத்தக்கூடாது..
பணியில் உயர்வு
அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கும் சுவர் கடிகாரம் பேட்டரிகளை அடிக்கடி மாற்றி, ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.. கடிகாரம் நிற்கவும் கூடாது, சேதாரமாகவும்கூடாது, விரிசல் அடைந்து இருக்கவும் கூடாது..
ஒருவேளை வீட்டிலிருந்து அலுவல் வேலையை பார்ப்பவர்களாக இருந்தால், தென்கிழக்கு திசையில் லேப்டாப், செல்போனை வைத்து பயன்படுத்த வேண்டும்.. இதனால், வேலையில் உயர்வும் கிடைக்கும். டேபிளில் லேப்டாப் போன்றவற்றை வைத்து பணிபுரிவதாக இருந்தால், எலக்ட்ரிக் ஒயர்கள் வெளியே தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும். இது அலுவலகத்துக்கும் பொருந்தும்.












Click it and Unblock the Notifications