குரு பூர்ணிமா.. சதுரகிரியில் குவியும் பக்தர்கள்.. கருட வாகனத்தில் உலா வரும் திருப்பதி மலையப்பசாமி
விருதுநகர்: ஆனி மாத பௌர்ணமி பூஜை மற்றும் குருபூர்ணிமாவை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். திருமலை திருப்பதியில் இன்றைய தினம் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் உலா வருவதைக்காண பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பொதுவாக அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என முக்கிய விசேஷ நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சித்தர்கள் வாழும் பூமியில் மலையேறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை சாமி தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி சிறப்பு பூஜைக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஜூலை 1ஆம் தேதி முதல் நாளைய தினம் வரை நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.
பக்தர்கள் காலை 6.30 மணிக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இன்று ஆனி மாத பௌர்ணமி மற்றும் குருபூர்ணிமா கொண்டாடப்படுவதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை கிடையது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. இன்றைய தினம் குரு பூர்ணிமாவை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications