காலில் விழுவது தப்பில்லைங்க..கணவர் காலை தினமும் பிடிச்சு விடுங்க கோடீஸ்வர யோகம் ஓடி வரும்
பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது நல்ல விசயம்தான். அதே போல தினசரியும் பெண்கள் கணவரின் கால்களை பிடித்து விட செல்வம் மழையாக கொட்டுமாம்.
சென்னை: அரசியல்வாதிகள் பலரும் தலைவரின் காலில் விழுந்து பதவி வாங்குவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிபெறுவதில் தவறொன்றும் இல்லை. கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு. கோவிலில் உள்ள சக்தியை நமது உடல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். அல்லது கோயிலின் தரையில் அமர வேண்டும் என்று சொல்வார்கள். அதே போல பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது சக்தியை அதிகப்படுத்த உதவும். பெண்கள் கணவரின் காலை தினசரியும் பிடித்து விடுவதால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்றும் முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.
மகாலட்சுமி தேவியை நெஞ்சில் வைத்து தாங்குகிறார் பெருமாள். ஓயாது அலை வீசும் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது படுத்திருக்கும் மகாவிஷ்ணுவின் கால்களை மகாலட்சுமி பிடித்து விட்டுக்கொண்டிருப்பார். இதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது உண்டா?

இந்த குறியீடு ஆணாதிக்கத்தை குறிப்பதல்லவாம். கணவனின் கால்களை பிடித்து விட்டால் செல்வம் பெருகும் என்பதை குறிக்கத்தானாம். அதெப்படி கணவன் காலை பிடித்தால் செல்வம் சேரும் என்கிறீர்களா? மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள் ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே வைத்துள்ளனர்.
ஆண்களின் கால் முழங்கால் பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்குகீழ் வருகின்றது. அதேசமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டது என்று முன்னோர்கள் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள்.
ஆண்களின் முழங்கால் பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இப் பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.
எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிதேவி திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகி ன்றார்கள்.
மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். கணவனின் காலை மனைவி பிடித்துவிட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் அதிகரிக்கும் என்றும், வீட்டில் யோகம் பிறக்கும். மகாவிஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு இதுதான் காரணமாம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் லட்சுமிதேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
இதே போல எப்போதும் உண்மையே பேசுபவர்கள், சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் என இவர்கள் வீட்டில் லட்சுமி ஆனந்தமாக வசிப்பாள் எனப் புராணங்கள் கூறுகின்றன.
லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் மகாலட்சுமி தாயார் இருக்கும் இடங்கள்தான்.
மிக புனிதமான உறவாக போற்றப்படுவது கணவன் மனைவி உறவே ஆகும். அந்த உறவில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்பொழுது, வாழ்க்கை சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இதை படிப்பவர்கள் எளிதாக கோடீஸ்வரர் ஆக இப்படி ஒரு வழி இருக்கையில் பணத்திற்காக ஏன் டென்சன் ஆக வேண்டும். இரவு உறங்கும் போது கணவனின் காலை பிடித்து விடுங்க அப்புறம் பாருங்க வீட்டு அம்மணிகளின் பர்ஸ்களில், பீரோவில் சும்மா பணம் நிறையும். மனைவியின் காலை கணவர்கள் பிடித்து விட்டாலும் இது நடக்கும், ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக எழுதப்பட்ட பதிவு. கணவன் காலை பிடித்து விடும் மனைவியை நெஞ்சில் வைத்து பெருமாள் போல தாங்குவாராம் கணவர். என்ன கோடீஸ்வரர் ஆக இன்று முதலே தயாராகி விட்டீர்களா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications