வரவேற்பறையில் இந்த பொருளை தூக்கி எறியுங்க.. உங்க வீட்டின் ஹாலில் என்னென்ன வைக்கலாம்? வாஸ்து டிப்ஸ்,
சென்னை: வீட்டில் வழக்கமாக பயன்படுத்தும் பொருட்களை சரியான வகையில், சரியான திசையில், சரியான முறையில் வைத்திருந்தாலே, வரக்கூடிய நெருக்கடிகளையும், துன்பத்தையும் தவிர்க்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். பூஜையறை, சமையலறை, படுக்கையறை, கழிவறைகள் என ஒவ்வொரு அறைகளுக்கும் ஒவ்வொரு வாஸ்து முறைகள் சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், வரவேற்பறை எப்படி இருக்க வேண்டும்? வரவேற்பறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்னென்ன? என்பதை குறித்தெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எப்போதுமே வீட்டின் வரவேற்பறையானது விசாலமாக இருக்க வேண்டும்.. எப்போது ஹாலுக்குள் சூரிய வெளிச்சம் படும் வகையில் ஜன்னல் வைக்க வேண்டும்.. அந்த ஜன்னல்களும் பகல் முழுவதும் திறந்திருக்க வேண்டும். அப்போதுதான் பாசிட்டிவ் எனர்ஜி, நல்ல சக்திகள் வீட்டிற்குள் நுழையும்..

சோபா, நாற்காலிகள்
கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருப்பது நல்லது.. அளவுக்கதிகமான சோபா, நாற்காலிகளை ஹாலில் போட்டு வைக்கக்கூடாது. வடக்கு கிழக்கு முகமாக பார்த்து உட்காரும் வகையில் அல்லது தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டியோ சோபா நாற்காலிகளை போட வேண்டும். உத்திரம் அல்லது பிரம்மஸ்தானம் வரும் இடத்தில் சோபா, மேஜையை போடக்கூடாது..
எலக்ட்ரானிக் பொருட்கள்
எக்காரணம் கொண்டும் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தென்மேற்கு பகுதியில் வைக்கக்கூடாது.. இதனால் இயந்திரங்கள் பழுதாகிவிடும்.. எனவே, டிவி போன்றவற்றை தென்கிழக்கு மூலையில் வைக்கலாம்.. சீலிங் வெள்ளை நிறத்தில் இருப்பது நல்லது.
அதேபோல ஹாலில் சுவர்களில் இயற்கை காட்சிகள் அடங்கிய வால் பேப்பர்களை ஒட்டலாம். பிரம்மாண்டமான கடவுள் படங்களை ஹாலில் வைக்கலாம். குறிப்பாக, மதுரை மீனாட்சி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படங்களை வரவேற்பரையில் வைப்பது செல்வ வளத்தை பெற்றுத்தரும்.
வலம்புரி சங்கு, விளக்குகள்
மகாலட்சுமியின் அம்சமான வலம்புரி சங்கினை ஹாலில் மாட்டி வைக்கலாம்.. அழகிய விளக்குகள், சாண்டிலியர் விளக்குகளையும் ஹாலில் பொருத்தி வைக்கலாம்.. ஆனால், கொடிய விலங்குகள், போர்கள், ரத்தக்காட்சிகள் கொண்ட படங்களை ஹாலில் மாட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.. மலர்கள், பழங்கள் போட்டோக்களையும் மாட்டி வைக்கலாம்.
நிலை வாசலுக்கு உள்ளே நுழையும்போது எதிரே உள்ள சுவற்றில், கற்பக விநாயகர் படத்தை மாட்டிவைக்கலாம். வீட்டிலிருந்து வெளியே செல்லும், நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில் அதாவது, வீட்டிற்கு உள்ளே பார்த்தபடி பச்சை நிற கிரக லட்சுமியின் போட்டோவை மாட்டி வைக்கலாம். இந்த கிரகலட்சுமி பார்த்துவிட்டு வெளியில் சென்றால், அனைத்தும் சுபம்தான்.
மீன் தொட்டி, கற்றாழை
ஆனால், கிரகலட்சுமி மாட்டி வைத்திருக்கும் இடத்தில் கதவை திறக்கும்போது, அதன் மேல் பக்கத்தில் விளக்கு இருக்கக்கூடாது.
ஹாலில் கண்ணாடியை பொருத்தி வைக்கலாம்.. மீன் தொட்டி வைப்பதாக இருந்தால் வரவேற்பறையின் கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில்.. பூந்தொட்டியில் வாசனையான மலர்களை வைக்கலாம்..
கற்றாழையும் பயன்படுத்தலாம். ஏனென்றால், கற்றாழையை தினமும் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சங்கு மற்றும் மணியை வரவேற்பறையில் வைப்பதன் மூலம், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிலிருந்து நீங்கும்.
வரவேற்பறையில் வைக்கக்கூடாத பொருட்கள்
உக்கிரமான படங்களை வைப்பதை தவிர்க்கலாம். காகித மலர்கள், போன்சாய் மரங்கள், கள்ளிச் செடிகள் போன்றவற்றை ஹாலில் வைக்கக்கூடாது. உடைந்த நாற்காலிகள், விரிசலடைந்த சேர்களை ஹாலில் போட்டு வைக்கக்கூடாது.. அழகுக்காக வைக்கப்படும் எந்த பொருளும் உடைந்து காணப்படக்கூடாது.. வரவேற்பறையில் இறந்தவர்களின் போட்டோக்களை மாட்டி வைக்கலாம்.












Click it and Unblock the Notifications