தீபங்கள் போற்றும் திருக்கார்த்திகை நாள்.. எத்தனை தீபங்கள் எங்கெங்கு ஏற்ற வேண்டும்? என்ன பலன்?
சென்னை: கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும். எந்தெந்த இடங்கள், எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது என்று பார்க்கலாம்.
கார்த்திகை தீப திருவிழா: கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் தீப திருவிழா இன்றைய தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடும் அதே நேரத்தில் அனைவரின் வீட்டிலும் விளக்கேற்றுவார்கள்.

தீபத்திருநாள்: வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் நம் இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் நாம் பெற முடியும்.
அகல் விளக்கு: தினசரியும் நம்முடைய வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்று முன்னோர்கள கூறியுள்ளனர். கார்த்திகை தீப திருநாளில் பித்தளை, வெள்ளி போன்ற பிற விளக்குகளை ஏற்றுவதைக் காட்டிலும் மண்ணால் செய்யபட்ட அகல் விளக்குகளை ஏற்றுவது சிறந்தது. அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புதிதாக தான் வாங்கி ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் முன்பு பயன்படுத்திய விளக்குகளை நன்கு சுத்தம் செய்து துடைத்து பின் பயன்படுத்தலாம்.
எத்தனை விளக்கு: புதிய விளக்கு ஏற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் தலைவாசலில் ஏற்றக் கூடிய 2 விளக்குகளை மட்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம். விளக்கில் விரிசல் எதுவும் இல்லாமல் நல்ல விளக்காக இருப்பது நல்லது. அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி ஏற்ற வேண்டும்.
27 விளக்குகள்: கார்த்திகை தீபத்தன்று ஒரு அகல் விளக்கினை முதலில் ஏற்றி விட்டு அதில் இருந்து மற்ற விளக்குகளை ஏற்றுவது நல்லது.
கார்த்திகை தீப திருநாளில் நாம் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 விளக்குகள் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எங்கெங்கு என்ன தீபங்கள்: வீட்டின் தலைவாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்ற வேண்டும். குறிப்பாக சமயலறையிலும் விளக்கேற்ற வேண்டும்.
மகாலட்சுமி அருள்: வாசலில் அரிசி மாவினால் கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவில் ஒரு விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் துளசி செடி, நெல்லி மரம் , மாதுளை மரம் போன்றவை இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மூன்றிலும் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். மொத்தம் 27 விளக்குகளை ஏற்ற வேண்டும்.
எந்த திசை என்ன பலன்: பொதுவாக கிழக்கு திசை நோக்கிதான் விளக்கேற்றுவார்கள். துன்பம் நீங்கும். குடும்பம் செழிப்படையும். வடக்கு திசை நோக்கியும் விளக்கேற்றி வழிபட குபேர சம்பத்து செல்வ வளம் பெருகும். மேற்கு திசை நோக்கி விளக்கேற்றினால் கடன், தோஷம் நிவர்த்தி அடையும். தெற்கு திசை முன்னோர்களுக்கு மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும்.
நல்லெண்ணெய்: தீபம் ஏற்றுவதற்கு சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும். கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. குடும்பத்தில் தீராத துன்பத்தை கொடுக்கும்.
தீபம் குளிர்விக்கும் முறை: விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணையக்கூடாது. ஒரு சிலர் தீபம் ஏற்றி வைத்து விட்டு மறந்து விடுவார்கள். விளக்கு ஏற்றிய எண்ணெய் இருக்கும் போதே சில மணி நேரங்களில் பூ அல்லது அதற்கென உள்ள குச்சியால் குளிர்விக்க வேண்டும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications