தெய்வீக மூலிகை செடிகளை இப்படி வணங்குங்களேன்... நீங்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும்

துளசி இலையின் நுனியில் பிரம்மா, மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: எத்தனையோ மூலிகை செடிகளை நாம் பார்த்தாலும் சில மூலிகைச் செடிகள் தெய்வீக மூலிகைச் செடிகளாக போற்றப்படுகின்றன. அதில் துளசி,வில்லம் இறைவனுக்கு அன்றாடம் படைக்கப்படும் மூலிகைச் செடிகளாகும். அனைவரும் பார்த்த ஒரு மூலிகைச் செடியான தொட்டாற்சிணுங்கியின் அற்புத மகிமை பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள் பல உள்ளன.

பாற்கடலில் இருந்து எழுந்த துளசி உன்னதப் பொருட்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த ஒப்புயர்வற்ற துளசியைப் பார்த்த மாத்திரத்திலேயே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். துளசியின் மென்மையான ஸ்பரிசம் நம்மைத் தூய்மையாக்கும். துளசியைப் போற்றித் துதிப்பதால் நமது நோய்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கி விடும். அதே போல தெய்வீக மூலிகையான தொட்டாற்சிணுங்கியை வீட்டில் வளர்த்து வணங்கினாலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்குமாம்.

பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

மூலிகைச் செடிகள்

மூலிகைச் செடிகள்

சதுரகிரி மலைக்குப் போகிறோம், நம் காலடியில் எத்தனையோ மூலிகைகள் படுகின்றன. ஆனால் அவைகளுக்குள்ளே எத்தனையோ அபூர்வ சக்திகள் ஒழிந்து கிடக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அங்கு தொட்டாற்சிணுங்கி செடிகள் பூத்து குலுங்குவதை பலரும் பாத்திருக்க மாட்டார்கள் நம்முடைய வீட்டில் துளசியுடன் தொட்டாற்சிணுங்கியும் அருகருகே வளர்த்து வர அதற்கான பலன் தானாக கிடைக்குமாம்.

துளசி செடியின் மகிமை

துளசி செடியின் மகிமை

துளசி தீர்த்தத்தைத் தெளித்து கொண்டால் மரணபயம் நீங்கும். துளசியை வீட்டில் வளர்த்து வந்தால் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும். தினந்தோறும் துளசியைப் பக்தியுடன் வணங்கிப் பூஜித்தால் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். துளசி நாமம் சொன்னாலே போதும். கிருஷ்ணன் உன் பாங்களை தொலைத்து விடுவான். துளசி செடியை கண்ணால் பார்த்தாலே போதும். கோ தான பலன் கிடைக்கும். துளசி செடியை வீட்டில் வளர்த்தவனை யம தூதர்கள் வாசல் அருகே கூட வர முடியாதவர்களாக ஆக்கிவிடுவாள் என்று கிருஷ்ண பக்தர்கள் கூறியுள்ளனர்.

 பெருமாளுக்கு உகந்த துளசி

பெருமாளுக்கு உகந்த துளசி

துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத் தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.

துளசி தொட்டாற்சிணுங்கி

துளசி தொட்டாற்சிணுங்கி

ஒரு தொட்டியில் நல்ல வளமான மண்ணை நிரப்பி துளசியையும், தொட்டால் சிணுங்கியையும் அருகருகே வைத்து தோட்டத்திலோ, மாடியிலோ தென்மேற்கு மூலையில் அதிகம் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, நெய் விளக்கு ஏற்றி, பூஜை செய்து 21 முறை வலம் வரவேண்டும். தினமும் நைய்வேத்தியம் படைக்காவிட்டாலும் ஒவ்வொரு வெள்ளியன்றும். காலை மாலையில் நீராடி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர் அல்லது பானகம், வெண்பொங்கல் வைத்து பூஜை செய்து வரவேண்டும்.

சித்தர்கள் சொன்ன உண்மை

சித்தர்கள் சொன்ன உண்மை

தினமும் குளித்து விட்டு விளக்கேற்றி 21 முறை வலம் வருவதை மறக்காமல் செய்ய வேண்டும் என்றும், இதை நம்பிக்கையோடு தவறாமல் செய்து வந்தால் உங்களது பிரச்சனைகள் நீங்கும் என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். தொட்டாற்சிணுங்கிதான் துளசியின் கணவனான ஜலந்திரன் என்கிற அசுரன். இவன் ஈஸ்வரனிடம் அழியாத வரங்களைப் பெற்றவன். தேவலோகத்தையே அழித்து நாசம் செய்தவன். மனைவி மேல் பாசம் கொண்டவன். மகா விஷ்ணுவின் தந்திரத்தால் ஜலந்திரன் தலை துண்டிக்கப்பட்டு துளசியின் மடியில் விழுந்ததாகப் புராணம் சொல்கிறது.

மகாவிஷ்ணு அளித்த வரம்

மகாவிஷ்ணு அளித்த வரம்

துளசியின் மேல் மனமிரங்கி இருவரையும் மூலிகைகளாக வரம் அளித்து மகா விஷ்ணு அருளியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இரு மூலிகைகளுக்கும் அனேக அற்புத சக்திகளை மகா விஷ்ணு தந்தருளியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. துளசி, தொட்டாற்சிணுங்கியை திங்கள் கிழமையன்று பூஜை செய்து வலம் வந்தால், எண்ணங்கள் யாவும் ஈடேறும். ஐந்து வாரங்களில் இதற்கான பலன் தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து செய்து வந்தால் பலன் நிலைத்திருக்கும்.

எந்த நாளில் பூஜை செய்யலாம்

எந்த நாளில் பூஜை செய்யலாம்

துளசி, தொட்டாற்சிணுங்கியை வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து வலம் வந்தால், குடும்ப ஒற்றுமை, போக பாக்கியம், லட்சுமி கடாட்சம் யாவும் உண்டாகும். செவ்வாய், சனிக் கிழமைகளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும். வியாழக்கிழமை வலம் வந்தால் விரோதிகள் வசியமாவார்கள். அந்தந்த கிழமைகளின் பலன்கள் யாவும் சித்திக்கும் என்ற தகவல் சித்தர்களின் தலைமைக்குருவான அகத்தியரால் சொல்லப்பட்டதாகும்.

தொட்டாற்சிணுங்கியை தொட்டால்

தொட்டாற்சிணுங்கியை தொட்டால்

தொட்டாற்சிணுங்கி மின் சக்தி உள்ள ஒரு மூலிகை என்றும், அதை ஒரு மண்டலம் தினமும் தொடுபவன் மன ஆற்றல் பெருகும் என்றும், சொன்னது பலிக்கும், நினைத்தது நடக்கும் என்றும், ஆண்மையைப் பெருகும் என்றும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வாகிய மூலிகை என்றும், மந்திர சக்தி உடையது என்றும் பல விஷேச சக்திகள் சொல்லப்பட்டுள்ளன.

நினைத்தது நிறைவேறும்

நினைத்தது நிறைவேறும்

எப்படிப்பட்ட வேண்டுதலை வேண்டுமென்றாலும் இந்த செடியிடம் வைக்கலாம். அதிகப்படியான பணம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அதிகப்படியான லாபத்தை தரக்கூடிய தொழில் அமைய வேண்டும் என்றும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்து கூட இந்த தொட்டாசிணுங்கி செடியை 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு பிரார்த்தனை செய்து வந்தால் நீங்கள் வேண்டியது நிச்சயமாக நடக்கும்

மூலிகைகளின் சக்திகள்

மூலிகைகளின் சக்திகள்

துளசி வெப்ப மூட்டும் மூலிகை, தொட்டாற் சிணுங்கி வெப்பத்தை குறைக்கும் மூலிகை. துளசி மின்சாரத்தால் அடி பட்டவர்களைக் காக்கும், தொட்டாற் சிணுங்கி மின் சக்தியைத் தூண்டும். இப்படி ஒன்றுக் கொன்று எதிர் இயக்கங்களைக் கொண்ட பெண்பால் ஆண்பால் மூலிகையான கணவனும் மனைவியுமாக துளசியும், தொட்டாற் சிணுங்கியும் திகழ்கிறது.

 துளசிக்கும் தொட்டாற்சிணுங்கிக்கும் உள்ள தொடர்பு

துளசிக்கும் தொட்டாற்சிணுங்கிக்கும் உள்ள தொடர்பு

இத்தனை இலட்சம் மூலிகைகளில் இவை இரண்டிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை சித்தர்கள் எப்படித்தான் கண்டுபிடித்தனரோ என்று ஆச்சர்யம் தோன்றுகிறது. இதில் மேலும் ஒரு விந்தை என்ன வென்றால் பெண்பாலான துளசி சூரியனின் அம்சம். ஆண்பாலான தொட்டால் சிணுங்கி சந்திரனின் அம்சம். நம் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பால். அப்படியே மாறி நிற்கும் காரணத்தை சித்தர்களே அறிவார்கள். எனவே உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவே துளசி, தொட்டாற்சிணுங்கியை வீட்டில் வளர்த்து வணங்கி வாருங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த பிராத்தனை செய்யும் போது தூய மனதுடனும் அசைவம் சாப்பிடாமல் சுத்தமாக குளித்து தூய எண்ணத்தோடு செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+