உண்டியல் காசு நிரம்பி வழியணுமா? அப்ப இதை செய்தாலே போதும்.. பணப்பெட்டி வைக்க உரிய திசை இதுதான்.. ஓஹோ
சென்னை: மண் உண்டியல் பரிகாரம் என்றால் என்ன? உண்டியலில் காசு சேர்ப்பதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா? வீட்டில் பணப்பெட்டியை எப்படி வைக்க வேண்டும்? பிசினஸ் செய்பவர்கள் நாற்காலியை எந்த திசையில் போட்டு அமரலாம்? இதோ சுருக்கமாக பார்ப்போம்.
வெளிநாடுகளில், உண்டியல் சேமிப்பு பழக்கத்தை இன்றும்கூட தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பழக்கி தருகிறார்கள்.. சேமிப்பு பழக்கத்தை விடாமல் ஊக்கப்படுத்துகிறார்கள்.

உண்டியலில் பணம் போடுவதால், பல நன்மைகள் கிடைக்கின்றன.. உதாரணத்துக்கு உண்டியலில் உள்ள துளை மிகவும் சிறியது. அதில் காசை சுலபமாக போட்டுவிடலாமே, எடுப்பது கடினம். உண்டியலை உடைத்தால்தான் காசை எடுக்கமுடியும்..
பலன்கள்: சிறிய தொகையை நாம் போட்டுவந்தாலும், பல நாள் கழித்து அதை எடுக்கும்போது, அது ஒரு கணிசமான தொகையாக பெருகியிருக்கும். சிறு சிறுதுளி பெரு வெள்ளம் என்ற தத்துவமும் எளிதாக புரியும்.. போதுமான பணம் கிடைப்பதுடன், சேமிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணமும் எழும்..
இந்த உண்டியலில் சேமிக்க வயது வரம்பெல்லாம் கிடை யாது.. யார் வேண்டுமானாலும் சேமிக்கலாம், தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.. நிதி மேலாண்மையைப் பழகலாம். இத்தனை நன்மைகளை தரும் உண்டியலை வீடுகளில் பத்திரமாக வைத்து கையாள வேண்டும்.
1 ரூபாய் நாணயம்: ஒருவேளை உண்டியலில் தொடர்ந்து காசு சேரவேண்டுமானால், மண் உண்டியல் பரிகாரம் எளிதாக செய்யலாம். இதற்கு வீட்டில் தென்மேற்கு மூலையில் உண்டியலை வைத்து, 6 வெந்தயம் போட வேண்டும். பிறகு 6, ஒரு ரூபாய் நாணயத்தையும் அதே உண்டியலில் போட வேண்டும். பௌர்ணமி தினத்தில் அம்பாளை மனதார வேண்டிக்கொண்டு, இந்த நாணயங்களை உண்டியலில் செலுத்தினால், உண்டியலில் சீக்கிரம் பணம் சேர தொடங்குமாம்.
வடக்கு திசை: அதேபோல, பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் போட்டு வைக்க வேண்டும். உங்களது பணப்பெட்டியை வடக்கு திசையில் வைக்க வேண்டும்..
அந்த பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வைக்கவேண்டும். இதனால், வாசனை பரவும் என்பதுடன், செல்வமும் நிலையாக தங்கும். ஒருவேளை வடக்கு திசையில் வைக்க முடியாவிட்டால், கிழக்கு திசையில் பணப்பெட்டி அல்லது பீரோவை வைக்கலாம். பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை வைக்கலாம்.
பணப்பெட்டி: நீங்கள் பிசினஸ் செய்பவராக இருந்தால், நீங்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கை, வட மேற்கு திசையை நோக்கியவாறும், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறும் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை, கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், பணம் வைப்பதற்கான சரியான திசை, வடக்கு தான். வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு திசைகளில் பணத்தை வைக்கக்கூடாது.












Click it and Unblock the Notifications