Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை பௌர்ணமி.. கவலையை போக்கும் கந்தனின் கிருத்திகை விரதம்.. சிறப்பு மிகுந்த கார்த்திகை மாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மற்ற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு என்பார்கள்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா? கிருத்திகை விரதம் எப்போது துவங்க வேண்டும்? யார் யாரெலலாம் கிருத்திகை விரதம் மேற்கொள்ளலாம்? சுருக்கமாக பார்ப்போம்.
நேற்றைய தினம் அதாவது நவம்பர் 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.. இந்த மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதமாகும்.. கந்தனுக்கு முதலில் உருவான திருநாமம் கார்த்திகேயன் என்பதாகும்.. ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதாலேயே கார்த்திகேயன் என்ற பெயர் வந்தது.

சிவபெருமான்: முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக, சிவபெருமானால் உருவாக்கப்பட்ட விரதம் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதமாகும்.. எனவே, இந்த மாதத்தில் முருகனுக்கு விரதமிருப்பது மிகப்பெரிய பலனை பெற்றுத்தரும்..

spirituality krithigai viratham karthika pournami viratham

கார்த்திகை நாட்களில் முருகப் பெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத்துணையும், புத்திசாலியான புத்திரர்களும் கிடைப்பார்கள்.. வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைப்பதுடன், எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

கார்த்திகை முதல் நாளில் முருகன் சன்னதியில் 3 அகல்விளக்கு ஏற்றி, 9 முறை சுற்றி வந்து முருகனை பிராத்தனை செய்து வரும்போது, வேலை வாய்ப்புகள் அமையும் என்கிறார்கள்..

விளக்குகள்: அதேபோல, முருகன் சன்னதியில் 3 விளக்கேற்றி, 6 முறை சுற்றி வந்து பிராத்தனை செய்து வந்தால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு பலன் கிடைக்கும். 5 விளக்கு ஏற்றி கோவிலை 9 முறை ஆண்களும், 1 விளக்கு ஏற்றி திருமண யோகம் என்ற பிரார்த்தனை செய்து, 9 முறை பெண்களும் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால், திருமணம் கைகூடும் என்பார்கள்.

கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும்போது பௌர்ணமி ஏற்படும்.. கார்த்திகை மாதம் முழுவதுமே விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமாகும். இந்த நாளில்தான் கார்த்திகை பௌர்ணமி வருகிறது.. மேலும், கார்த்திகை பௌர்ணமி நாளில் கார்த்திகை தீபத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், வரும் டிசம்பர் 13 அன்று கார்த்திகை பௌர்ணமி வருகிறது.

விரத வழிபாடு: கார்த்திகை துவங்கும் நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். இந்த கார்த்திகை பெளர்ணமி நாளில் சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.. அதுமட்டுமல்ல, வெண்கலம், வெள்ளி விளக்கில் நெய்யிட்டு, தீப ஒளியுடன் கோயிலுக்கு தானமாக வழங்கினால், இதுநாள் வரை பட்ட கஷ்டங்களும், தடைகளும் விலகுமாம்.

கார்த்திகை பௌர்ணமி நாளில் விரதமிருப்பது, பல்வேறு பலன்களை பெற்றுத்தரும்.. கந்த சஷ்டி 6 நாள்களும் விரதமிருக்க முடியாமல் போனவர்கள்கூட, இந்த கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்தால், அதே பலன்களை பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.

கார்த்திகை தீபம்: கார்த்திகை பவுர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.. அதேபோல, கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்றுவது கூடுதல் சிறப்பை தருமாம்.. அப்படி தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் நம்முடைய மரபில் உள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் வரும் துவாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் கங்கை கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்குமாம்.. அதேபோல, நெல்லி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்றும், விளக்கு , பழங்கள், தானியங்கள் ,வெண்கல பாத்திரங்கள் தானம் செய்தால் செல்வம் பெருகும் என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+