சாந்தி முகூர்த்தத்துக்கு நல்லநேரம் அவசியம் ஏன்? முதலிரவு முக்கியத்துவம்.. அதென்ன தலையற்ற நட்சத்திரம்
சென்னை: சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிப்பது எதற்காக தெரியுமா? சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிப்பதில் முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம்? சாந்தி முகூர்த்த நேரம் சரியாக கணிக்காமல் இருப்பதால் கர்ப்பிணி பெண்ணுக்கு துன்பம் வருமா? எத்தகைய துன்பம் வரும்? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
திருமணத்திற்கென்று சுபமுகூர்த்த நாள் குறிக்கும்போதே, கூடுதலாக 4 முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம் குறித்துவிடுவார்கள் பெரியவர்கள்.. அதாவது, 1. முகூர்த்தக் கால் நாட்ட, 2. மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம், 3. பெண் அழைப்பிற்கான நேரம், 4. திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம், 5. சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம் என இந்த நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

அறிவுறுத்தல்கள்: பிரஜோத்பத்தி என்ற முக்கியமான கடமையை நிறைவேற்றுவதற்காக பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு நிகழ்வுதான் இந்த சாந்தி முகூர்த்தம். அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது.. இதுதான் நம்முடைய முன்னோர்களின் ஆசையும்கூட..
வம்சம் விருத்தி அடையும்போதுதான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்சகதிக்கு செல்ல முடியுமாம். எனவேதான், ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது. நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும் என்பார்கள்..
சுபமுகூர்த்தம்: சுபமுகூர்த்தத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதே அளவுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.. ஒருவேளை, சாந்தி முகூர்த்த நேரம் சரியாக கணிக்காமல் விட்டுவிட்டால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏகப்பட்ட துன்பங்கள் வந்து சேரும்.
உதாரணத்துக்கு, தம்பதிகள் சேர்க்கையின்போது நட்பு கிரகங்களான சூரியனும், சந்திரனும் இடையே 2 பகை கிரகங்களுக்கு இடையே அமைந்திருப்பது, அதே சமயத்தில் லக்கினத்தில் எந்தவொரு சுப கிரகத்தின் பார்வை விழவில்லையானாலும், சம்பந்தப்பட்ட பெண் உயிரிழக்கக்கூடும். இதே விளைவு லக்கினம் மற்றும் 7ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருப்பது, மற்றும் லக்கினத்தின் மேல் சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருப்பதாலும் ஏற்படலாம்.
சிக்கல்கள்: அதேபோல, செவ்வாய் 4ம் இடத்திலும், வலுவிழந்த நிலையில் சூரியனும், சந்திரனும் 12ம் இடத்தில் இருப்பதுடன், சுக்கிரனின் பாவ கத்தரியில் இருக்கும் நிலை இருந்தால், தாய்க்கும், கர்ப்பப்பையிலுள்ள குழந்தைக்கும் சிக்கல் ஏற்படலாம்.
செவ்வாய் பகவான் 4ம் இடத்திலும், சூரியன் 12ம் இடத்திலும் இருக்கும் நிலையில், தேய்பிறை சந்திரன் அசுப கிரகங்களின் பார்வையில் இருந்தாலும், துன்பம் ஏற்படலாம். இன்னும் இதுபோல ஏராளமான நுணுக்கமான விஷயங்கள் உள்ளதால், ஜோதிடர்களின் ஆலோசனையின்றி சாந்தி முகூர்த்தத்தை நடத்தக்கூடாது.
சாந்தி முகூர்த்தம்: ஏனென்றால், சாந்தி முகூர்த்தத்தை காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில் வைக்கக்கூடாது என்றும் சொல்வார்கள்.. புனர்பூசம், விசாகம் பூரட்டாதி இந்த மூன்றுமே தலையற்ற நட்சத்திரங்கள் ஆகும். எனவே, இந்த நட்சத்திரம் உள்ள நாட்களில் சாந்தி முகூர்த்தம் குறிக்கக்கூடாதாம்.
அதுமட்டுமல்ல, சில நட்சத்திரங்களுக்கு தலையும் கிடையாது, உடலும் கிடையாது, காலும் கிடையாது. இத்தகைய உடல் ஊனம் அமைப்பு கொண்ட நட்சத்திரங்கள் வரும் முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம் போன்ற நல்ல காரியங்களை செய்யக்கூடாது என்பார்கள்.. குறிப்பாக 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள் என்பதால், இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முதலிரவு வைக்கக்கூடாது.
முக்கியத்துவம்: அதே போல மிருகசிரீடம், சித்திரை,அவிட்டம் ஆகிய இந்த 3 நட்சத்திரங்களுக்கு உடல் கிடையாது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு கால்கள் கிடையாது. இப்படி எந்த நேரத்திலும் புதுமண தம்பதிகள் இணைந்து, அதனால் பிறக்கப்போற குழந்தைக்கு செவ்வாய் தோஷம்,சர்ப்பதோஷம் என தோஷமாக அமைந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவேதான் திருமணத்திற்கு நேரம் குறிப்பது போல முதலிரவுக்கும் நல்ல நேரம் குறிக்கப்படுகிறது...
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications