சமையலறையில் இந்த பொருள் கீழே விழவே கூடாது.. கிச்சனில் இதை உடனே வெளியே போட்டுடுங்க! பணம் தரும் வாஸ்து
சென்னை: ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் லக்ஷ்மி கடாட்சத்துடன் சுபீட்சமாக இருக்க வேண்டுமானால், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், கடன், வறுமையின்றி செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமானால், அந்த வீட்டின் அமைப்பானது சரியாக இருக்க வேண்டும்...அதிலும், வீட்டின் சமையலறையில் சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. அதேபோல, சில பொருட்கள் கீழே விழுவது அபசகுணம் என்பார்கள்.. அந்தவகையில், ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.
வீட்டில் எப்போதுமே குங்குமம் கைத்தவறி கீழே சிந்துவது அபசகுணம் என்பார்கள்.. ஆனால் அது தவறு.. குங்குமம் தவறி கீழே கொட்டிவிட்டால், வெற்றி மற்றும் அனுகூலம் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தமாம்.

தேங்காய், மஞ்சள், குங்குமம்
அதேபோல, தேங்காய் கைத்தவறி கீழே விழுவதும் நன்மைக்கே.. நீங்கள் செய்யப்போகும் காரியங்கள், தொழில் அனைத்திலுள்ள தடை நீங்கும்.. பண வரவும் அதிகமாகும் என்று அர்த்தம்.. வாசனையுள்ள பூக்கள் கைத்தவறி கீழே கொட்டினாலும், காரிய வெற்றி என்று பொருளாகும்..
ஆனால் சமைலறையில் சில பொருட்கள் கீழே விழுவது நன்மை தரும் என்பார்கள்.. சல பொருட்கள் கீழே விழவே கூடாது என்பார்கள்..
உதாரணத்துக்கு சர்க்கரை கீழே கொட்டி விட்டால் அது நன்மைக்குதானாம்.. புகழும், வளமும், தொழிலில் மேன்மையும் ஏற்படுமாம்.. அதேபோல, மங்களகரமான மஞ்சள் கீழே கொட்டினால் மங்கலம், சிறப்பு என்று பொருள். ஏதேனும் தொழில் தொடங்கப்போகிறீர்கள் என்றால், அது சிறப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
கைதவறி கொட்டும் பால்
ஆனால், அரிசி கைத்தவறி கீழே கொட்டி விட்டால், குடும்ப சச்சரவு, காரியத்தடை என்று அர்த்தம்... புதிதாக தொழில் தொடங்கினாலும், தடையும், குழப்பமும் ஏற்படுமாம்..
சமையல் எண்ணெய் கைத்தவறி கீழே கொட்டிவிட்டால், அவசெய்தி, இழப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.. தொழில் செய்பவர்களுக்கு கடன், பொருளாதார நெருக்கடி வருமாம்..
பால் காய்ச்ச எடுக்கும்போது கைத்தவறி பால் கொட்டிவிட்டுட்டாலோ, அல்லது பூனை பாலை தட்டி விட்டுடாலோ அது குடும்பத்துக்கு நல்லதல்ல.. கல் உப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாக சொல்லப்படுவதால், அதனை சிறிதும்கூட தவறி கீழே சிந்தக்கூடாது.. இதனால் பொருளாதார இழப்பு, பண விரயம் ஏற்படுமாம்.
சமையல் பாத்திரங்கள் நழுவி தவறி விழுவதும், பாத்திரங்கள் உடைவதும் நல்லதல்ல.. இதனால் குடும்பத்தில் தீரா பிரச்சனை வருமாம்.. உறவுகளிடம் பகையும் வளருமாம்.
தண்ணீர் - வாயு மூலை
அதுமட்டுமல்ல, வீட்டின் குலதெய்வமும், பித்ருக்களும் தண்ணீரில் இருப்பதாக நம்பப்படுவதால், வாயு மூலையில் தண்ணீர் பானை, அல்லது சிறிய அரிசி மூட்டை வைத்திருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் காலியாக போட்டு வைக்கக்கூடாது.
கிச்சனில் அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள், ஏலக்காய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. எக்காரணம் கொண்ம், இரும்பினால் செய்யப்பட்ட அஞ்சறை பெட்டியில், நாணயங்களை சேகரிக்க கூடாது. அதாவது இரும்புடன் இரும்பை சேர்க்கக்கூடாது. எப்போது சமையலறையில் மண்சட்டியை மறைத்து வைத்து, அதில் பணத்தை சேகரிபப்து பொருளாதாரத்தை உயர்த்தும்.
வெளியே எடுத்துருங்க
அதேபோல, சில பொருட்கள் சமையலறையில் இருப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.. முக்கியமாக மருந்து பொருட்களை வைக்கக்கூடாது.
பாத்திரங்களை கழுவாமல் அப்படியே சிங்கில் போட்டு வைத்திருக்க கூடாது. இது குடும்ப வறுமையை அதிகப்படுத்திவிடும்... மேலும், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், உடைந்த பாத்திரங்களையும், நெளிந்த, விரிசலடைந்த பாத்திரங்களையும் சமையலறையில் வைத்திருக்கக்கூடாது.. அழுகிய துர்நாற்றம் வீசும் பொருட்களையும் கிச்சனில் வைத்திருக்க கூடாது என்பார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications