பர்ஸில் இதை மட்டும் வைக்காதீங்க.. விடாமல் பணம் சேர ரூ.1 போதுமே.. மணி பர்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க
சென்னை: வீட்டில் பணப்பற்றாக்குறை நீங்கி, நிதி நிலைமை சீராக வேண்டுமானால், நம்மிடமுள்ளது சிறிது பணமே என்றாலும், அதனை முறையாக வைத்தாலே போதும்.. அதாவது பணத்தை எப்படி வைக்கிறோம்? எங்கே வைக்கிறோம்? என்பதை பொறுத்துதான், பணம் நம்முடைய கையில் புழங்குமாம்.. பணத்திற்கு நாம் உரிய மரியாதையை தந்தாலே போதும், அந்த பணம் நம்மை வந்து சேர்ந்துவிடும் என்பார்கள்.. அந்தவகையில், பர்ஸை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்னென்ன பர்ஸில் வைக்க வேண்டும்? வைக்கக்கூடாது? என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்.
பர்ஸில் எப்போதுமே தேவையில்லாதவற்றை வைக்கக்கூடாது.. பிறரது விசிட்டிங் கார்டு, பில் என எதுவாக இருந்தாலும் சரி, அடுத்தவரின் பொருட்களை பர்ஸில் வைத்து கொள்ளக்கூடாது.. உங்களுடைய பழைய பில், ரசீது என்றாலும்கூட, அவைகளை பர்ஸில் வைத்திருக்க தேவையில்லை.. வரவு தரக்கூடிய வருமான சம்பந்தப்பட்ட பில், சம்பளம், pay Slip போன்றவற்றை வைத்திருக்கலாம்.

டாக்டர் எழுதி தந்த மருந்து சம்பந்தப்பட்டவற்றையும் பர்ஸில் வைத்திருக்க வேண்டாம். அதேபோல கூர்மையான பொருட்களான சிறிய கத்தி, பிளேடு என எதையும் வைத்திருக்கக்கூடாது..
பர்ஸின் கலர் முக்கியம்
எப்போதுமே பர்ஸில் பணத்தை, மடித்து சுருட்டி வைக்காமல், நன்றாக விரிந்தபடி முக்கியமாக கசங்காமல் வைத்திருக்க வேண்டும்.. ஒருவேளை பர்ஸில் வைத்தாலே மடித்து சுருட்ட வேண்டியிருந்தால், அதுபோன்ற பர்ஸ்களை தவிர்த்துவிடலாம். பர்ஸ்கள் எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
அழுக்கு படிந்து, கிழிந்துபோய் இருக்கவே கூடாது. இதுவும் வறுமையை அதிகமாக்கிவிடுமாம். அதேபோல, பர்ஸின் நிறமும் கவனிக்கப்பட வேண்டும்.. பிரவுன், கிரே, பச்சை, பர்ப்பிள், நேவி ப்ளூ பிங்க் என பலநிறங்களில் பர்ஸ் வாங்கலாம், ஆனால், கருப்பு நிற பர்ஸை பயன்படுத்தக்கூடாது.. இதனால் மேலும் பணப்பற்றாக்குறை வந்துவிடும்.
அழுக்கான நோட்டுகள்
எவ்வளவுதான் ரூபாய் நோட்டுகளை பர்ஸில் வைத்திருந்தாலும், சில்லறைகளையும் போட்டு வைக்க வேண்டும்.. குறிப்பாக, 1 ரூபாய் நாணயம், 20 ரூபாய் நோட்டு போன்றவற்றை பர்ஸில் போட்டு வைக்கலாம். இந்த ரூபாய், நாணயங்கள் எதுவாக இருந்தாலும், மொத்தமாக போட்டு வைக்காமல், பிரித்து பிரித்து வைப்பது நல்லது.
ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் அழுக்காக இருக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் காலியாக மட்டும் பர்ஸ் இருந்துவிடக்கூடாது. சிவப்பு வண்ணத்தில் சிறு துணியை பர்ஸ்களில் வைத்திருக்கலாம்..
இடது கையில் பர்ஸை எடுக்க கூடாது, கொடுக்கவும் கூடாது.. எப்போதுமே வலது கையிலேயே பர்ஸை பயன்படுத்த வேண்டும்.. பர்ஸை மென்மையாக பயன்படுத்த வேண்டும்.. ஒருபோதும் தூக்கி எறிய கூடாது.. பணத்துக்கு தருவதுபோலவே, உரிய மதிப்பு பர்ஸுக்கும் தரப்பட வேண்டும்.
பணம் சேர மந்திரம்
அதேபோல, பேன்ட் பாக்கெட்டில் பர்ஸ்களை வைக்கக்கூடாது.. அதேபோல, வீட்டிலிருக்கும்போது, பூஜையறையில் பர்ஸ் வைப்பது நல்லது. வேலைக்கு கிளம்பும்போது மீண்டும் அதை எடுத்து செல்லலாம்.
தினமும் காலை, மாலை குளித்து விட்டு பூஜையின்போது, நெய் விளக்கேற்றி வைத்து 11 முறை "ஓம் ஸ்வர்ண ரட்சகாய நமஹ" என்ற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால், பணம் வரவு அதிகமாக இருக்கும் என்பார்கள்.. அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.












Click it and Unblock the Notifications