ஜூன் மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
ஜூன் மாத பலன்: ஜூன் மாதத்தில் 5 ராசியினர் அதிர்ஷ்டத்தையும், யோக பலன்களையும் அனுபவிக்கப் போகின்றனர். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்தப் பெயர்ச்சிகளின் போது ஒரு சில ராசிக்காரர்களுக்கு யோக பலன்களும், சில ராசியினருக்கு அசுப பலன்களும் கிடைக்கும்.

அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தில் சூரியனும், குருவும் ஒரே ராசியில் இணைகின்றன. எந்த 5 ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்களில் ஜெயம், அதிர்ஷ்டம், பணம் உள்ளிட்டவை கிடைக்கப் போகின்றன. எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த விஷயங்களில் நன்மை ஏற்படும். பொறுமையை அதிகளவில் கையாளக் கூடிய மாதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். காரியங்களில் வெற்றியையும், அற்புதத்தையும் ஏற்படுத்தும். குடும்பத்தினரிடமிருந்து தேவையான உதவியும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் உழைப்பு உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் லாபம் உண்டாகும். குரு 10 ஆம் வீட்டில் இருப்பதால் யோகாதிபதிகள் அனைவரும் வலுவாக இருப்பதால் அற்புதமான யோகங்களைத் தருவார்கள். வேலைகளில் எந்தவிதமான தடைகள் வந்தாலும் அதனை தைரியமாக சமாளிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம், உத்தியோகம், தொழில், படிப்பில் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கண்கூடாகப் பார்ப்பீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வியாபாரம், தொழில், படிப்பு சார்ந்த விஷயங்களில் ஏற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் மாதமாக இருக்கும். உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகளை எல்லாம் புத்திசாலித்தனாக சமாளிப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பனிபோல நீங்கும். உங்களுடைய வாழ்க்கை துணையினுடன் இணைந்து பேசி புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும் மாதமாக அமையும். எடுத்த காரியங்களை சரியான நேரத்தில் முடித்து அதில் வெற்றி காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்டநாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய புது ஐடியாக்களை செயல்படுத்துவீர்கள். அதன் மூலம் நல்ல லாபம் உண்டாகும் வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதுதொடர்பான முயற்சிகள் அனைத்தும் கைகூடும் மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications