நேரங்காலம் பார்க்காம கடன் வாங்காதீங்க..வகையா சிக்குவீங்க..கடன் தீர ஆன்மீகம் சொல்லும் ஈஸி டிப்ஸ்
சென்னை: கடன் கொடுப்பவர்கள் கூப்பிட்டு கூப்பிட்டு கொடுப்பார்கள். வங்கி லோன் மட்டுமல்லாது இப்போது கடன் கொடுக்கும் செயலிகளும் அதிகரித்து விட்டது. ஆப் மூலம் கடன் வாங்கி வாழ்க்கைக்கே ஆப்பு வைத்துக்கொண்டவர்கள் இருக்கின்றனர். பிசினஸ்காக கடன் வாங்கியது போய் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு கூட கடன் வாங்கி சூதாடி தோத்தவர்கள் அதிகம். ஏன் எதற்காக கடன் வாங்குகிறோம் என்று யோசித்து வாங்க வேண்டும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள் என்ன பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம் என்று ஆன்மீகத்தில் பரிகாரம் கூறப்பட்டுள்ளது.
கடன் வாங்கும் போதும் சரி கடன் கொடுக்கும் போதும் சரி நேரம் காலம் பார்த்து வாங்க வேண்டும் கொடுக்க வேண்டும். பணமோ, பொருளோ சரியான நேரம் பார்த்து கடன் வாங்கினால்தான் அதை எளிதில் திருப்பி தர முடியும். தவறான நேரத்தில் கடன் வாங்கினால் அதை திருப்தி தர முடியாமல் கடனில் இருந்து மீள முடியாமல் போய் விடும்.

ஒரு சிலர் பணம் வரும் முன்பே அதற்கான செலவை தயாராக வைத்திருப்பார்கள். வேறு வழியில் பணம் வரும் என்று நினைத்து கடன் வாங்கி விடுவார்கள். அந்த பணம் வராமல் போனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமர் போய் விடும். அவசர தேவைக்காக கடன் வாங்குவது தவறில்லை. ஆடம்பர தேவைக்காக அநாவசிய தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. ஹஸ்தம் நட்சத்திரம் நாளில் கடன் வாங்கவே கூடாது. அப்படி கடன் வாங்கினால் அந்த கடனை திருப்பி தர முடியாமல் போய் விடுமாம். கடன் மேலும் மேலும் பெருகுமாம்.
கடனை திருப்பி தர வேண்டும் என்று நினைப்பவர்கள் குளிகை நேரத்தில் கடன் கொடுக்கலாம். செவ்வாய்கிழமை பிரதோஷ நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு 90 நிமிடத்திற்கு முன்பாக கடனை திருப்பி தர வேண்டும். செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் கடனை திருப்பி தரலாம் கடன்கள் படிப்படியாக அடைபடும்.
கடனை அடைக்க முடியவில்லையே என்று சிரமப்படுபவர்கள் எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு தோதான நாள் பார்த்து செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். சிறிய மண்பானை குடுவையை வாங்கி அதில் நீங்கள் கடன் வாங்கியவரின் பெயரை எழுதி கடன் தொகையை எழுதி போட வேண்டும். சிவப்பு துணியில் 10 கருப்பு மிளகு, ஒரு கொட்டைப்பாக்கு மற்றும் சில 1 ரூபாய் நாணயங்களை சேர்த்து கட்டி அந்த மண் பானைக்குள் போட வேண்டும். உங்கள் கை தவிர யாருடைய கையும் மண் பானையில் படக்கூடாது.
பூஜை செய்யும் போது மண் பானைக்கும் தீபாராதனை காட்டி கடன் தீர பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன்கள் தீர வழி பிறக்கும் பண வருமானமும் வரும். கடன் பிரச்சினை தீர்ந்த உடன் சிவப்பு துணியை அவிழ்த்து அதில் உள்ள சில்லறை காசுகளை அருகில் உள்ள கோவிலில் போட்டு விடுங்கள். கடன் எழுதி வைத்த காகிதம், மண்பானை, கொட்டைப்பாக்கை ஓடும் நீர், கிணறு அல்லது குளத்தில் போட்டு விடுங்கள். முழு நம்பிக்கையுடன் நீங்கள் செய்யும் பரிகாரம் கடன் தீர வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications