தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படும் கள்ளழகர்..நாளை எதிர்சேவை..வெள்ளியில் வைகையில் இறங்குகிறார்
மதுரை: சித்ரா பவுர்ணமி நாளில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் இன்று அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். கண்டாங்கி புடவை கட்டி கள்ளழகர் கோலத்தில் மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் வைகை ஆற்றில் கால் பதிக்கிறார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா திங்கட்கிழமை மாலை தொடங்கியது. இதில் கள்ளழகர் பெருமாளுக்கு மங்கள இசை முழங்க, வேதமந்திரங்களுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது,

அதன் பின்னர் பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடாகி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தார். சகல பரிவாரங்களுடன் சென்று திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்று எழுந்தருளினார். அப்போது விசேஷ பூஜைகள், சர விளக்குகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
புதன்கிழமையான இன்று மாலையில் மதுரைக்கு தங்க பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார். கள்ளழகருக்கு, வழிநெடுக பக்தர்களால் மண்டகப்படிகளில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு, நாளை வியாழக்கிழமை மதுரை நகருக்குள் நுழைகிறார்.
நாளை அதிகாலை மூன்று மாவடியில எதிர் சேவை நடக்கிறது. நாளை இரவு கள்ளழகர் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்குகிறார். 5ஆம் தேதி கள்ளழகர் அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
வைகையில் இறங்கும் கள்ளழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.
சனிக்கிழமை அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்றடைகிறார். இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.
தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு சனிக்கிழமை இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஞாயிறன்று காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளுவார். இது திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது. அந்த பல்லக்கில் தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் எழுந்தருளுவார்.
திங்கட்கிழமை அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு செவ்வாய்கிழமை காலை அழகர் கோயிலைச் சென்றடைவார். அங்கு அவருக்கு பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. கள்ளழகர் மதுரைக்கு வர இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே பக்தர்கள் கலைந்து செல்வார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications