கந்த சஷ்டி.. சிக்கல் சிங்காரவேலரும் திருச்செந்தூரும் முருகனும்.. சூரசம்ஹாரத்திற்கு துள்ளி வரும் வேல்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் 10 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
கந்த சஷ்டி: ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி என ஆறு நாட்கள் ஆறுமுக கடவுளுக்கு விரதம் இருந்து வணங்கி நம்முடைய உடம்பிலும் மனதிலும் உள்ள தீய எண்ணங்கள், கெட்ட சக்திகளை அளிப்பதற்காகவே இருக்கும் விரதம்தான் கந்த சஷ்டி விரதம்.

சஷ்டி விரதம் சிறப்பு: மாதந்தோறும் தேய்பிறை சஷ்டி, வளர்பிறை சஷ்டி திதி காலங்களில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் எதிரிகள் தொந்தரவு ஒழியும் நோய் நொடிகள் நீங்கும், கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் நடைபெறும். இதனை காண்பதற்காகவே முருகன் ஆலயங்களுக்கு பக்தர்கள் படையெடுப்பார்கள்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா இன்று யாக சாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. யாக சாலைக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள வாத்தியங்கள் முழங்க சண்முகவிலாசம் மண்டபத்தை அடைவார். இதனையடுத்து சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும்.
கந்த சஷ்டி நிகழ்ச்சிகள்: இன்று திங்கட்கிழமை கந்த சஷ்டி விழா தொடக்கம், செவ்வாய்கிழமை முருகப்பெருமான் வேல் வாங்குதல், புதன்கிழமை சூரபத்மனுக்கு தூது விடுதல், வியாழக்கிழமை சூர்பத்மனுடனான போர் தொடங்குதல் நவம்பர் 18 சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரத்திற்காக கடற்கரை வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஏற்பாடுகள்: கந்த சஷ்டியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகம், விடுதிகள், தனியார் விடுதிகள், சமுதாய விடுதிகளில் தங்கியிருந்து விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்த விழா நடக்கும் 7 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதி வழங்கப்படவில்லை. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிக்கல் சிங்கார வேலர்: திருச்செந்தூர் போலவே மயிலாடுதுறையை அடுத்துள்ள சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் பக்தர்கள் காப்புக்கட்டிக்கொள்வார்கள். சிங்காரவேலர் தங்க மஞ்சத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.
சக்தி வேல் வாங்கும் முருகன்: வரும் 17ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். அப்போது முருகப்பெருமான் முகத்தில் வியர்வையானது முத்து முத்தாக பெருகும். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் சிக்கலுக்கு வருவார்கள். வரும் 18ஆம் தேதியன்று மகா அபிஷேகமும் சிங்கார வேலர் தங்க ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும் நடைபெறும். 19ஆம் தேதி சிங்காரவேலர் தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளி ரதத்தில் வீதி உலா வருதலும் நடைபெற உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications