திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்! 7ல் சூரசம்ஹாரம்! குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியுள்ளது. விரதமிருந்து வழிபாடு நடத்த திருச்செந்தூருக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2ஆவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்த பெற்ற கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. அங்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளுகிறார். யாகசாலை பூஜைகளுக்குப் பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது.
பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின்னர் யாகசாலையில் ஜெயந்திநாதருக்கு மகாதீபாராதனை நடக்கிறது. பின்னர் தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, சண்முக விலாச மண்டபம் சென்றடைவார்.
மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு தீபாராதனை செய்யப்படும். இதைத் தொடர்ந்து தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி, பிரகாரத்தை வலம் வந்து கோயிலை அடைவார். இந்த விழா வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனால் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது . இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ஆம் தேதி மாலை கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். வரும் 8ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க 18 இடங்களில், மொத்தம் 1,11,118 சதுரஅடி பரப்பில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே தங்கியுள்ளனர். மேலும், தனியார் தங்கும் விடுதிகள், மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், மடங்களில் தங்கி விரதமிருப்பதற்காக நேற்று காலை முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
யாகசாலை பூஜைகள், தங்கதேர் வீதியுலா ஆகியவற்றை பக்தர்கள் பார்ப்பதற்காக கோயில் வளாகத்தில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் சென்னை தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 7-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவிருப்பதால், திருச்செந்தூருக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் 6-ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும், வரும் 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து பயணத்துக்கு www.tnstc.in என்ற இணையதளம், tnstc என்ற செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 7-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவிருப்பதால், திருச்செந்தூருக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் 6-ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும், வரும் 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து பயணத்துக்கு www.tnstc.in என்ற இணையதளம், tnstc என்ற செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications