Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. லாபத்துக்கு மேல் லாபம் கொட்டும்
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் கன்னி ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடம் எனும் லாப ஸ்தானத்தில் வந்து அமரப் போகிறார். தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தின் அதிபதியாகவும், பாக்கியத்தையும் தரக் கூடியவராக சுக்கிர பகவான் உள்ளார். நினைத்துப் பார்க்க முடியாத நல்ல மாற்றங்கள் கிடைக்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். சுக்கிர பகவானோடு புதன் இணைவு பெற்றுள்ளது.
மேன்மை
9 ஆம் அதிபதியும், 10 ஆம் அதிபதியும் இணைவு பெற்றுள்ளதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். அந்த யோகத்துடன் 11 ஆம் இடம் எனும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் லாபமும், மேன்மையும் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் காலகட்டமாக இருக்கும். சுகபோகத்துடன் இருப்பீர்கள்.
லாபம்
பொருளாதார மேன்மை, தனத்தைக் கொடுக்கக்கூடிய அந்த சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். எந்த தொழில், வேலையை செய்தாலும் அதில் லாபம், மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். இடமாற்றம், பதவி மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம் என அனைத்து மாற்றங்களும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் யோகம் உண்டு. திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். வாக்கில் இனிமை உண்டாகும். பேச்சால் காரியங்களை செயல்படுத்துவீர்கள். போக வேண்டும் என்று நினைக்கும் இடத்துக்கு சென்று மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்வீர்கள். பொதுப் பணிகளுக்கு செலவு செய்வீர்கள். செவ்வாய் அமர்ந்திருப்பதால் கோபம், ஆக்ரோஷம் ஏற்படும்.
அனுகூலம்
ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை சுக்கிர பகவான் குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் திருமணம் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு, செய்வது போன்றவை அனுகூலத்தை ஏற்படுத்தும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் சிந்தனை உருவாகும். சுக்கிரன் குருவின் நட்சத்திரத்தின் சாரத்தில் பயணிக்கும்போது இடம் வாங்கும் யோகம் உண்டாகும். அதனை செயல்படுத்துவதில் வெற்ற பெறுவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும்.
தொழில்
சுக்கிரன் பூச நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை பயணிக்கும்போது குழந்தைகளைப் பற்றிய சிந்தனை, படிப்பு சார்ந்த விஷயங்கள் குறித்த சிந்தனைகள் ஏற்படும். நிறைய பேருக்கு காதல் வெற்றி பெறும். படிப்பு, திருமணத்துக்காக கடன் வாங்குவீர்கள். செப்டம்பர் 14 ஆம் தேதி வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
தொழிலுக்கான நல்ல வியூகங்களை வகுப்பீர்கள். தன்னைப் பற்றிய சிந்தனைகள், திறமைகளை வெளிக்கொணரும் அற்புதமான காலகட்டம். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் நேரமாக இருக்கும். கலைத் துறையில் நுழையும் வாய்ப்பு ஏற்படும். நினைத்த காரியங்கள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். சுக்கிர ஜெயந்தி அன்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரனை சென்று வழிபடுவது, வெண்பட்டு சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications