Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளக்கு திரியின் திசை.. கார்த்திகை தீப முகங்களும், பலன்களும் என்ன? தீபத்திருநாளில் இதை மறக்காதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாதம் முழுவதுமே விளக்கேற்ற வேண்டும் என்பார்கள்.. எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்? எத்தனை முக தீபத்தை ஏற்றினால், என்னென்ன பலன் என்பதையும் முன்னோர்கள் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகமாக உள்ளது.. வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்கையும் ஏற்றலாம். ஆனாலும், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது கூடுதல் மகிமையாகும்.

karthigai month spirituality lamp vilakku

கார்த்திகை மாதம்: கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும்... இதற்கு காரணம், அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும் நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம். அதேபோல, தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் உறைந்துள்ளனர்.

தீபம் ஏற்றும்போது, சூரிய உதயத்திற்கு முன்பாகவே ஏற்றிவிட வேண்டும். குறிப்பாக, பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றுவதால், புண்ணியம் சேரும். மாலை வேளைகளில் 6 மணிக்கு வீட்டின் வாசலில் 2 மண் அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்தில் புண்ணியம் கிடைக்கும். முன் வினைப் பாவங்களும் நீங்கும். திருமண தடைகளும் விலகிவிடும்.

எத்தனை எண்ணிக்கை: அதேபோல, கார்த்திகை மாதங்களில் தீபங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. முக்கியமாக, கோலமிடப்பட்ட வாசலில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டுமாம். திண்ணைகளில் 4 அகல் விளக்குகளும், மாடங்களில் 2 அகல் விளக்குகளும், நிலைப்படியில் 2 அகல் விளக்குகளும், நடையில் 2, முற்றத்தில் 4 அகல் விளக்குகளும் ஏற்ற வேண்டும்.

தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும், துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய இந்த 3 தினங்களிலாவது கண்டிப்பாக தீபம் ஏற்றி வழிபட வேண்டும்... விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள்.

திசைகள்: 2 முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்.. 3 முகம் ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும். 4 முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். 5 முகம் ஏற்றினால், சகலநன்மையும், ஐஸ்வர்யமும் பெருகும் என்பார்கள்.


அதேபோல விளக்கின் திசையையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. குடும்பத்திலுள்ள துன்பங்கள், இன்னல்கள் நீங்க வேண்டுமானால் கிழக்கு திசையில் தீபம் ஏற்றலாம். கடன் தொல்லை தீர வேண்டுமானால், மேற்கு திசையிலும், திருமணத்தடை நீங்க வேண்டுமானால் வடக்கு திசையிலும் விளக்கேற்றலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது

விளக்குகள்: அதேபோல, கார்த்திகை தீபத்திருநாளில், எத்தனை விளக்குகளை கஏற்றுவது என்ற சந்தேகமும் சிலருக்கு எழும்... இதுகுறித்தும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தீபத்திருநாளில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கும், சமையலறையில் 1, நடையில் 2, பின்கட்டில் 4 விளக்கும், திண்ணையில் 4, மாட குழியில் 2 , நிலைப்படியில் 2, சாமி படத்துக்கு கீழே 2, வெளியே யம தீபம் ஒன்று, கோலமிடும் இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டுமாம்.. இந்த 27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிப்பதாகும்.

கார்த்திகை மாதத்தின் 30 நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வர வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்களும் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்குமாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+