சமையலறையில் இதை உடனே தூக்கி எறியுங்க.. வீட்டில் பணக்கஷ்டம் வந்துடுமாம்.. அடுப்பு மேடை இப்படி இருக்கா
மதுரை: நம்முடைய வீட்டில் சமையலறை சரியாக இருந்தாலே, ஒட்டுமொத்த வீட்டின் அமைப்பும் சரியாகவே இருக்கும்.. சமையலறை எப்படி இருக்க வேண்டும்? சமையலறையில் எந்த பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்? என்னென்ன பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அந்த வகையில், ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
வடகிழக்கு திசையில் சமையலறை இருந்தால், குடும்பத்தின் பொருளாதாரம் சீர்குலையும். வாடகை வீடுகளில் இப்படி அமைந்துவிட்டால், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதன் மூலம், குடும்பத்தில் வறுமையை நெருங்க விடாமல் செய்யலாம்.

கிச்சனுக்குள் கண்ணாடி
எப்போதுமே சமையலறையில், பாத்திரம் கழுவும் குழாய், வடகிழக்கில் இருப்பதுபோல பார்த்து கொள்ள வேண்டும். இந்த திசை மாறியிருந்தால், பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். சமையலறையின் ஜன்னலானது, கிழக்கு திசையில் இருப்பது சிறப்பு..
அதேபோல, உடைந்துபோன பொருட்கள், நசுங்கிய பாத்திரங்கள், பயன்படுத்தாத பாத்திரங்கள், உடைந்த கண்ணாடி, மருந்துகள், குப்பைகள் போன்றவற்றை சமையலறையிலிருந்து உடனடியாக அகற்றிவிட வேண்டும். இவையெல்லாமே குடும்பத்தை வறுமையில் சிக்க வைத்துவிடும. சமையலறையில் கண்ணாடி வைத்திருக்கக்கூடாது. அதிலும் மங்கலான உடைந்த கண்ணாடி என்றால் உடனே நீக்கிவிட வேண்டும்.
அழுக்கு ஆடைகள்
பெண்கள் குளித்துவிட்டே சமையலறையில் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும், அழுக்கான ஆடைகள், குளிக்காமல் சமைலறைக்குள் நுழைய கூடாது. குளிக்க முடியாவிட்டாலும்கூட, வாய் கொப்பளித்து, முகம் கழுவி விட்டு, பிறகு சமையலறைக்கு செல்ல வேண்டும்.
அப்படி சமையலறையில் நுழையும்போது, புளியை மட்டும் முதலில் தொடக்கூடாது .. ஏனென்றால், கிச்சனில் நுழைந்ததுமே புளியை தொட்டால், வீட்டிலுள்ள லட்சுமி விலக நேரிடும். எனவே, புளிக்கு பதிலாக, அரிசியை தொடலாம்.. அரிசியை ஊற வைக்கலாம், அரிசி படியிலிருந்து அரிசியை அளக்கலாம். சிம்பிளாக இருந்தாலும் சமையலறையில் ஏதாவது சமைத்துவிட வேண்டும். வெறுமனே அடுப்பை போட்டு வைத்திருக்கக்கூடாது.
அடிக்கடி டேஸ்ட் பார்க்கக்கூடாது
பெண்கள் சமைக்கும்போது, அடிக்கடி உணவின் ருசியை பார்க்கக்கூடாது என்பார்கள். இது அன்னபூர்ணாதேவிக்கு ஆகாத செயலாம்.. இரவு நேரங்களில் தூங்க செல்லும்முன்பு அடுப்பு மேடையை சுத்தமாக கழுவ வேண்டும்..
இரவில் சாதம் மீதமானால் அடியோடு சேர்த்து எடுக்காமல், சிறிது சாதத்தை பாத்திரத்திலேயே வைத்து தண்ணீர் ஊற்றி எடுத்து வைக்க வேண்டும். ஏனென்றால், அன்னலட்சுமி , மகாலட்சுமி சமையலறையில் இரவில் குடியிருப்பதாக நம்பிக்கை உண்டு. இவர்கள் பசியாறவே இப்படி சாதத்தை தண்ணீர் ஊற்றி எடுத்து வைக்க வேண்டும் என்பார்கள்.
மகாலட்சுமி வாசம்
அதேபோல, கிச்சனுக்கு கறுப்பு கலரை உபயோகிப்பது அசுபமானது.. மாறாக பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு என வெளிச்சமான, பிரகாசமான கலர்களை உபயோகிக்கலாம்.
நீர் சம்பந்தமான, பாத்திரம், குடம், வாட்டர் ப்யூரிஃபையர் போன்றவற்றை வடகிழக்கு திசையிலும், நெருப்பு தொடர்பான வீட்டு உபயோக பொருட்களை தென் மேற்கு திசையிலும் வைக்க வேண்டும். சமைத்த உணவுகளை ஸ்டவ்வுக்கு வலது புறம் வைக்கலாம். ஏனென்றால், அன்னபூரணி வாசம் செய்வது இந்த திசையில்தான்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications