குழலூதும் கண்ணன்.. மயிலறகு சூடிய மன்னன்.. உங்கள் வீட்டில் இதை வைத்திருந்தால் கிருஷ்ணன் ஓடி வருவான்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கண்ணனுக்கு பிடித்தமான பொருட்களை வீட்டிற்குள் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டமும் செல்வ செழிப்பும் உண்டாகும். கண்ணனின் கைகளில் எப்போதும் புல்லாங்குழல் இருக்கும்.. தலையில் மயிலிறகு சூடியிருப்பார். கிருஷ்ணன் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பார். கண்ணனின் பிறந்தநாளில் கண்ணனுக்குப் பிடித்தமான பொருட்களை நம்முடைய வீட்டில் நாம் வாங்கி வைக்க நன்மைகள் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்தவர் கண்ணன். கண்ணனின் வருகைக்காக அவரது பக்தர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கண்ணன் பிறந்த நாளில் பகவான் கிருஷ்ணருக்கு பிரியமான பொருட்களை நம்முடைய வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

கண்ணனுக்கு பிடித்தமானது மயிலிறகு. கண்ணனின் தலையில் எப்போதும் மயிலிறகு குடியேறியிருக்கும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமானோர் மயிலிறகு வாங்கிக்கொண்டு செல்கின்றனர். நம்முடைய வீட்டில் கண்ணனுக்குப் பிடித்தமான மயிலிறகை வாங்கி வீட்டில் வைக்கலாம்.
நம்முடைய வீட்டில் பணம் அதிகம் செலவானால் அதனை கட்டுப்படுத்த ஒரே பரிகாரம் மயிலிறகுதான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த மயிலிறகை நாம் பணம், நகை வைக்கும் அலமாரியில், பிரோவில் வைக்க வேண்டும். இதன் மூலம் வருமானம் கூடும் செல்வம் பெருகும். பணம் வீட்டில் நிலைக்கவும் செய்யும்.
படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் மயிலிறகுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைக்கலாம். குழந்தைகள் படிக்கும் ஸ்டடி ரூமில் மயிலிறகை வைத்து தினமும் வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மயிலிறகை படுக்கை அறையில் நாம் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நெருக்கமும் கூடும். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும்.
ஆயர்பாடியில் கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக்கொண்டு புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அனைவரையும் மயக்கிக்கொண்டிருப்பார். அவரது குழல் ஓசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாம் பசுக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். கோமாதா சிலைகளை நாம் வீட்டிற்குள் வாங்கி வைக்கலாம். கூடவே கண்ணனுக்கு பிரியமான புல்லாங்குழலை வாங்கி வைக்கலாம். பணம் வைக்கும் பீரோவில் புல்லாங்குழல் வைப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடி நீங்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications