குங்குமப்பொட்டின் மங்கலம்..பொட்டு வைத்த முகத்திற்கு இத்தனை மகுடங்களா..செல்வம் சேர மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பொட்டு வைத்த முகம் பூரண சந்திரன் போல பொலிவோடு இருக்கும். இன்றைக்கு இளைய தலைமுறை பெண்களுக்கு பொட்டு வைப்பதன் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. குறிப்பாக குங்குமப்பொட்டின் மகிமையைப் பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. நெற்றியிலும், நெற்றி வகிட்டிலும் ஏன் குங்குமம் வைக்கின்றனர் அதனால் என்ன நன்மைகள் என்று நாம் அறிந்து கொள்வோம்.
நெற்றியில் பொட்டு வைத்தாலே முகம் துடைத்து வைத்த குத்துவிளக்கு போல பளிச் என்று இருக்கும். இன்றைய இளம் பெண்கள் பலரும் தலையை கலைத்துப்போட்டு வெறும் நெற்றியாக இருப்பதையே ஸ்டைல் என்று கருதுகின்றனர். பலவிதமான மேக்அப் சாதனங்கள் போட்டு பெண்கள் தங்களை என்ன தான் அழகு படுத்திக் கொண்டாலும் கடைசியில் அவர்கள் வைக்கும் நெற்றி பொட்டில் தான் அழகானது முழுமை பெறும். நெற்றியில் பொட்டு லட்சுமி கடாட்சமும், வீட்டிற்கும் சுபிட்சமும் கிடைக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.
சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் ஆகும் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. எனவே குங்குமத்தை மறக்காமல் வைக்க வேண்டும். பொட்டு வைப்பது அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் கூட என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிகப்பு நிற குங்குமம்
இன்றைக்கு எத்தனையோ வண்ணங்களில் பொட்டுக்கள் வந்தாலும் குங்குமம் என்றாலே அடர் சிவப்பு நிறம்தான். நெற்றியில் பொட்டு வைத்த பெண்களை எந்த தீய சக்தியும் அணுகாது. அதே போல திருமணமான பெண் என்பதை உணர்த்த நெற்றி வகிட்டில் பொட்டு வைத்தனர் சுமங்கலி பெண்கள். குங்குமத்தில் தான் மஹாலக்ஷ்மி தாயாரும் வாசம் செய்கிறார். நெற்றி நிறைய பொட்டு வைத்து இருப்பவர்களை பார்த்து தான் மகாலஷ்மி போல இருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

சீதா தேவி கொடுத்த வரம்
ஒரு முறை சீதா தேவியின் அருகில் இருந்த ஹனுமன் அவர் நெற்றியின் நடுவில் ஏன் குங்கும திலகம் இட்டிருக்கிறார் என்று கேட்டார். இந்த குங்குமமானது ராமபிரான் மீது தான் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் அடையாளம் என சீதாதேவி கூறவே, வாயுபுத்திரனோ தன் உடல் முழுவதும் குங்குமத்தை பூசிக்கொண்டார். இதனை பார்த்த ராமபிரான் தனது பக்தன் ஹனுமனின் பக்தியை நினைத்து மகிழ்ந்து இனி உன்னை குங்குமம் வைத்து வணங்குபவர்கள் அனைத்து வளங்களையும் பெறுவார்கள் என்றும் வரமளித்தார்.

ஸ்டிக்கர் பொட்டு கலாச்சாரம்
இன்றைக்கு பலரும் ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறி வருகின்றனர். வீட்டில் இருக்கும் போதாவது குங்குமப்பொட்டு வைப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ஆன்மிகம் மட்டும் இல்லை அறிவியலும் கலந்து இருக்கிறது.
குங்குமத்தை பெண்கள் இரண்டு புருவங்களுக்கு இடையில் வைக்கும் போது அங்கு உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு மூளையில் உள்ள நரம்பு அனைத்தும் நன்றாக செயல்பட உதவும். இதனால் அவர்கள் உடல் மனம் இரண்டுமே அமைதியான நிலையில் வைத்து இருக்க இந்த பொட்டு பெரிதும் உதவும்.

குங்குமத்தின் மகிமை
குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். நெற்றியில் பொட்டு வைப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் பெரிய வரையறையையே வைத்திருந்தார்கள் அதையெல்லாம் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் குறைந்தது சில விசயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். ட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்பெருக்கும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.

மன அமைதி தரும் குங்குமம்
நெற்றியில் குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.

உடல் ஆரோக்கியம் தரும் குங்குமம்
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் வைப்பதன் மூலம் முகத்தின் அழகு கூடுவதோடு சுபிட்சம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

துணிவு தரும் குங்குமம்
நெற்றியின் மையப் பகுதியில் நமக்கு காந்தசக்தி அதிகமாக உள்ளது. குங்குமம் வைப்பதன் மூலமாக மற்றவர்கள் நம்மை வசியப்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும். கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். நெற்றியில் குங்குமத் திலகம் வைப்பதன் மூலமாக நமது அறிவாற்றலை அதிகப்படுத்த முடியும். எனவேதான் பண்டைய காலத்தில் போருக்கு புறப்படும் மன்னர்களுக்கு நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் கட்டை விரலால் பொட்டு வைத்து அனுப்பினர்.

தீர்க்காயுள் தரும்
குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரல் குங்குமம் அணிவது முன்னணித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். எனவேதான், வீட்டில் இருக்கும் மூத்த மருமகள் அல்லது மூத்தமகள் இதுபோன்று குங்குமத்தை நெற்றியில் வைப்பார்கள். சனிவிரல் எனப்படும் நடுவிரலில் குங்குமம் தொட்டு வைத்துக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

மோதிர விரல்
மோதிர விரலின் அடி முதல் நுனி வரை இந்த பிரபஞ்சமே அடங்கியுள்ளது. பிரபஞ்சத்தின் அடையாளமாக திகழக்கூடிய மோதிர விரலால் நெற்றியில் குங்குமத்தை இடுவது மற்ற விரல்களை காட்டிலும் சிறந்தது. கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலதுக்கையில் வாங்கி இடதுகைக்கு மாற்றக்கூடாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு வைத்துக்கொள்வது நல்லது.

உடலுக்கு நல்லது
குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலி சரட்டில் பஞ்சபூத சக்திகள் அதிகம். எனவேதால் தாலி சரடில் குளிக்கும் போது மஞ்சள் பூசி குளிப்பதோடு மாங்கல்யத்தில் பொட்டு வைப்பதும் நன்மையைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications