பிரிந்துள்ள தம்பதி ஒன்று சேர உதவும் குறுமிளகு பரிகாரம்! கணவன் மனைவி கட்டாயம் செய்ய வேண்டியது.. செம
சென்னை: கணவன் மனைவி இடையே புரிதல் என்பது மிக அவசியமாகும். இந்த புரிதல் இல்லாமல்தான், சண்டை, சச்சரவு, பிளவு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. சிலசமயம், ஈகோ காரணமாகவே, வன்முறை சம்பவங்களும் நடந்துவிடுகின்றன. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்தான் வீணாகின்றன. சரியான புரிதல் இல்லாததால் பிரிந்து வாழும் தம்பதி, மீண்டும் ஒற்றுமையுடன் இணக்கமாக வாழக்கூடிய எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாவது இடமும் பலமிழந்து காணப்பட்டாலும், எட்டாம் இட அஷ்டம ஸ்தானம் கெட்டுப்போனாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது என்பார்கள்.

முரண்பாடுகள் - பிணக்குகள்
கணவன், மனைவிக்குள் நிலவும் முரண்பாடுகளை சரிசெய்ய, உப்பு + மிளகு இரண்டும் சிறந்த பரிகாரமாக உள்ளது. பிறரை வசியம் செய்யக்கூடிய தன்மையும், அன்பால் ஈர்க்கும் சக்தியும் இந்த பொருட்களுக்கு உண்டு.
கல் உப்பு மற்றும் மிளகிற்கு எதிர்மறை எண்ணங்களை மாற்றும் சக்தி இருக்கிறது.. வீட்டில் நிலவும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி, தெய்வ ஆற்றலை பரப்பக்கூடிய தன்மை கொண்டதாகும். எனவேதான், தாந்திரீகம், மாந்திரீகம் போன்றவற்றில் உப்பு, மிளகு இரண்டுமே தவிர்க்க முடியாதவையாக உள்ளது..
குறுமிளகுகள்
அந்தவகையில், தம்பதிகளுக்குள் நிலவும் பூசலை அகற்ற, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீரை கொள்ள வேண்டும். முழு மிளகாக 27 எண்ணிக்கையில் எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல 27 முழு கல் உப்பையும் எடுத்து கொள்ள வேண்டும்.
தங்களது இணையின் பிணக்குகள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி, ஒவ்வொரு கல் உப்பு, மிளகையும் தண்ணீரில் போட வேண்டும். இறுதியாக டம்ளர் தண்ணீரை ஓடும் நீரில் அல்லது சிங்க்கில் கொட்டிவிடலாம். இதனால், விரைவில் பலன் கிடைக்கும்.
பெரியவர்கள் ஆசீர்வாதம்
பிரிந்துள்ள தம்பதிகள், உறவுகளுடன் இணைந்து சிவபெருமானுக்குரிய சோமவார விரதத்தை மேற்கொள்ளலாம். முழுமையாக விரதமிருக்க முடியாவிட்டாலும், நீர், பழச்சாறு உட்கொண்டு, இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
முன்பு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, தொடர்ந்து 21 திங்கட்கிழமைகளில் இந்த விரதத்தை முடிக்கும்போது, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.. மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம் இருந்தாலும் நீங்கிவிடும். இந்த விரத நாட்களில் சிவ-பார்வதிக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம்.
அர்த்தநாரீஸ்வர மந்திரம்
ஓம் ஹும் ஜும் சஹ அர்த்தநாரீஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமும் பிணக்குகள் தீர்ந்து புரிதல் உண்டாகும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வந்தாலும் விரைவில், தம்பதிகள் ஒன்று சேரலாம்.
அதேபோல, தினமும் அதிகாலையில் பூஜையறையில் கிழக்கு திசையில் அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை சொல்வதாலும் பலன் கிட்டும்.
மந்திரங்கள் - ஜெபம்
''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என்று 3 முறை பிரார்த்திப்பதாலும் தம்பதிக்குள் சண்டைகள் விலகி ஒற்றுமை நிலவ தொடங்கும். அதேபோல, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஸ்ரீவைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில், திருவாஞ்சியம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். ரோஜா நிறத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்தால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகமாகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications