குபேர பொம்மையின் ஸ்பெஷல்ஸ்.. மகிழ்ச்சி, பணத்தை பெருக்கும் ஹேப்பிமேன்.. குபேர பொம்மைக்கு பெஸ்ட் திசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், பணமும் தங்க வேண்டுமானால, குபேர பொம்மையை வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.. இதற்கு என்ன காரணம்? குபேர பொம்மையை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எந்த திசையில் வைக்கலாம்? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

குபேர பொம்மையை பிற நாடுகளில் "ஹேப்பிமேன்" என்று சொல்வார்கள்.. குபேர பொம்மை (Laughing Buddha) மகிழ்ச்சி, செல்வம், செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது.

Spirituality Kubhera Bommai Happyman

குபேர பொம்மையின் ஸ்பெஷாலிட்டி

குபேரனின் உருவமாக பார்ப்பதாலும், அந்த இடத்தில் குபேரனின் ஆசியால் செல்வமும் வளமும் பெருக வேண்டும் என்ற நம்பிக்கையிலும், வியாபார நிறுவனங்களில் இந்த பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

கடைகளுக்கு வரும் கஸ்டமர்கள், இந்த குபேர பொம்மையை பார்க்கும்போது, மனதிற்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது. எங்கெல்லாம் நேர்மறையான அதிர்வலைகள் அதிமாக பரவுகிறதோ, அங்கெல்லாம் செல்வவளம் பெறுகும் என்பது நம்பிக்கையாகும்..

எப்போதுமே, சிரித்துக்கொண்டிருக்கும் இந்த பொம்மையை நாம் பார்க்கும்போது, நமக்கே தெரியாமலே நமக்குள் ஒரு மகிழ்ச்சியும், நிம்மதியும் வரும். இதனால் மன அழுத்தம் குறையும். இதுதான் இந்த பொம்மையின் ரகசியமாகும்.

ஹேப்பி பொம்மையால் கிடைக்கும் நன்மைகள்

அதேபோல, குபேர பொம்மைகளை வீட்டில் வைப்பதால், குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டங்கள் என அத்தனையும் தீரும். அந்தவகையில், கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைக்கலாம்.. இதனால் நேர்மறையான எண்ணங்கள் மனதிற்குள் வரும். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும் என்பார்கள்.

குபேர பொம்மையை ஹால், டைனிங் ஹால் என எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.. குறிப்பாக, வீட்டின் பிரதான கதவுக்கு முன்னால் குபேர பொம்மையை வைக்க வேண்டும். வீட்டுக்குள் வரும் அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வைக்க வேண்டும். ஆனால், படுக்கையறை, சமையலறையில் இந்த பொம்மையை வைக்கக்கூடாது.

கடன் பிரச்சனைகள் தீரும் - இந்த விஷயம் முக்கியம்

சிரித்து கொண்டேயிருக்கும் இந்த பொம்மையை பார்க்கும்போது, மனதில் உள்ள அழுத்தம், பாரம், குழப்பம் குறைகிறது.. வரப்போகும் இன்னல்களை எதிர்நோக்குவதற்கான, தைரியமும், நம்பிக்கையும் கிடைக்கிறது.. அதிலும், கருத்து வேறுபாடுகள் நிறைந்த குடும்பத்தில், இநத பொம்மையை வைத்திருப்பதால், உறவகளுக்குள் சுமூக நிலைமை ஏற்படும்.. கடன் பிரச்சனையும் விலகும் என்பது நம்பிக்கையாகும்.

இந்த குபேர பொம்மைகளில் பல வடிவங்கள் உள்ளன.. லாஃபிங் புத்தா, பைகளை ஏந்தி இருக்கும் குபேர பொம்மை, உலோகத்தால் செய்யப்பட்ட குபேர பொம்மை என பல வகைகளில் உள்ளன.. இவைகளை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது. ஆனால், இந்த குபேர பொம்மையை கைகளை உயர்த்திய நிலையில் இருப்பது வீட்டிற்கு நல்லதல்ல என்பார்கள். குபேர பொம்மை எப்போதுமே இரண்டரை முதல் மூன்றடி உயரத்தில் இருக்க வேண்டும்..

புத்த மதத்தில் இந்த பொம்மை கடவுளாகவே மதிக்கப்படுகிறது. எனவே, இந்த பொம்மையை வீட்டில் வைத்திருக்கும்போது, இழிவுப்படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.. உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+