பல்லி விழுந்தது உங்கள் தலையிலா? தலைமுடியிலா? என்ன பலன் தெரியுமா?
சென்னை: பல்லி உங்கள் தலையில் விழுந்ததா இல்லை தலைமுடியில் விழுந்ததா, நன்றாக யோசியுங்கள் இரண்டுக்குமே வேறு வேறு பலன்கள்தான்.
வீட்டில் சர்வ சாதாரணமாக நடமாடுவது பல்லியாகும். இவற்றில் பல வகைகள் உண்டு. ஜாதக சாஸ்திரத்தின்படி கேதுதான் பல்லி என சொல்லப்படுகிறது. பொதுவாக வாயில்லா ஜீவன்களை வதைக்கக் கூடாது. அதிலும் பல்லிகளை கண்டிப்பாக வதைக்கவே கூடாது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் பல்லியின் உருவம் தங்கத்தில் இருக்கிறது. இதனை பக்தர்கள் வணங்கிவிட்டு செல்கிறார்கள். அப்படிப்பட்ட பல்லி தனது இரையை தேடும் போதோ அல்லது பயத்திலோ ஓடும் போது கீழே விழ வாய்ப்புள்ளது.
அப்படி தரையில் விழுந்தால் பிரச்சினையில்லை. ஆனால் பெண்களின் உடல் பாகங்களில் விழுந்துவிட்டால்தான் அதற்கான பலன்களை அறிய வேண்டும். இது பொதுவாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இருந்தாலும் நாங்கள் சொல்கிறோம்.
பல்லி கத்துவது கூட சகுணங்களுடன் ஒப்பிடப்படுகிறது. அதாவது பல்லி ஒருவரது தலையில் இடது பக்கம் விழுந்துவிட்டால் கலகம் ஏற்படும். அதே பல்லி தலைமுடியில் விழுந்துவிட்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்காது என்கிறார்கள். அது போல் நெற்றியில் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
இதே புருவத்தில் விழுந்துவிட்டால் பெரிய பணக்காரர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். கன்னம் மற்றும் கண்களில் விழுந்தால் பிரச்சினை ஏற்படும். முகத்தில் பல்லி விழுந்தால் உறவினர்கள் வருவர். இதே இடது காதில் விழுந்தால் லாபம் ஏற்படும். வலது காதில் விழுந்தால் ஆயுள் கூடும். இடது தோள் பட்டையில் பல்லி விழுந்தால் செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும்.
வலது தோள் பட்டையில் விழுந்தால் மனதுக்கு பிடித்தமான சம்பவங்கள் நடக்கும். வலது கையில் விழுந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். வலது மணிகட்டில் விழுந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும். மார்பு பகுதியில் பல்லி விழுந்துவிட்டால் லாபம் மற்றும் சுபம் ஏற்படும்.
பல்லி கால் பாதத்தில் விழுந்துவிட்டால் எங்காவது பயணம் செய்வீர்கள். பிறப்புறுப்பின் மீது பல்லி விழுந்துவிட்டால் கஷ்டம் ஏற்படும், அது பணக் கஷ்டமாகவும் இருக்கலாம். புடத்தில் விழுந்தால் பண வரத்து அதிகரிக்கும். பல்லி நேராக தொப்புளில் விழுந்துவிட்டால் ஆடை, அணிகலன்கள் கிடைக்கும். தொடையில் விழுந்தால் பெற்றோருக்கு மன வருத்தம் ஏற்படும்.
இப்படி பல்லி விழுவதற்கு பலன்கள் உள்ளன. இவையெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்றால் தெரியவில்லை. ஆனால் சாஸ்திரங்கள் சொல்வதை நாம் சொல்கிறோம். மற்றபடி இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனதை பொருத்தது. உங்கள் மீது பல்லி விழுந்து என்ன பலன் ஏற்பட்டது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications