Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மச்சங்களும், அர்த்தங்களும்.. இடுப்பில் மச்சம் இருக்கா? எப்பவும் யோகம்தான் போங்க! இவங்க மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மச்சங்கள் எதனால் தோன்றுகின்றன.. எங்கே மச்சம் இருந்தால், என்ன பலன் என்பது குறித்து மச்ச சாஸ்திரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. அந்தவகையில், கழுத்து, இடுப்பு, புருவங்களில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

நம்முடைய உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது, ஒரு சில இடத்தில் மிக அதிகமாக சுரந்துவிடுகிறது. அப்போது ஒருவிதமான அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், அங்கு மச்சங்கள் உருவாகின்றன. பிறந்த சில குழந்தைகளுக்கு கால், அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து இருந்தாலும், குழந்தைகள் வளரும்போதே, அவைகள் மறைந்துவிடும்.

Spirituality mole macha sasthra

அதனால்தான், ஆரோக்கியத்தை வைத்து பார்க்கும்போது, இந்த மச்சங்களினால் பாதிப்புகள் எதுவும் பெரிதாக இருப்பதில்லை. ஆனால், மச்சங்களின் மேல் அரிப்போ அல்லது திடீரென்று மச்சத்தின் அளவு பெரிதானாலோ, அது உடனடியாக கவனிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் டாக்டர்கள்.

என்ன காரணம்: இதுவொருபுறமிருந்தாலும், ஜோதிடத்தில் மச்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றன.. மச்சம் ஏற்படுவதற்கும் கிரகங்கள்தான் காரணமாகவும் இருக்கின்றன. குறிப்பாக, ராகு கேது கிரகங்களும், ரத்தத்திற்கு காரகரான செவ்வாயும் மச்சத்திற்கு காரணங்களாகின்றன..

மச்சம் அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை எப்போதுமே உன்னத நிலையில் இருக்கும். இப்படி உள்ளவர்கள், பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறப்பார்கள். கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை கழியும். வருமானம் நிரந்தரமாக இராது.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக ராகு கேது தொடர்பு பெற்று சனி பார்வை பெற்றால் மச்சம் அதிகமாக இருக்குமாம்.. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பார்களாம். ஆண்களின் இடது மார்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் அதிகமாக பிறக்க வாய்ப்புள்ளது.. பெண்களிடம் அன்புடன் பழகுவார்கள்..

மச்ச சாஸ்திரம்: வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண் குழந்தைகள் பிறக்கும் என்று மச்ச சாஸ்திரம் சொல்கிறது.. 2 கண்களில் ஏதாவதொரு வெண்படலத்தின்கீழ், மச்சம் இருந்தால் அவர்களுக்கு இன்னல்கள் அதிகமாக வந்து சேரும்.. 2 கண்களில் ஏதாவதொரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால், அவரது வாழ்க்கை சீராக இருக்கும். என்றாலும், தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை அவர் சந்தித்துவிடுவாராம்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் வறுமையில் வாடுவார்களாம்.. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருந்தாலும், அதை சமாளித்துவிடுவார்களாம்.

கழுத்து மச்சம்: கழுத்தில் மச்சம் இருந்தால், தானாகவே பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்குமாம். வலது கழுத்தில் மச்சம் இருந்தால், பிரச்சனை இருந்தாலும் சிலநாட்களிலேயே அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.. இடது புற கழுத்தில் மச்சம் இருந்தால், அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக வெளியே வர முடியாது. அதுவும், அந்த மச்சம் கறுப்பாக இருந்தால், தூக்கத்தையே தொலைக்கக்கூடிய அளவுக்கு மனக்குழப்பமும் கலக்கமும் இருக்குமாம்.

இடுப்பில் மச்சம் இருப்பவர்கள் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். நல்ல உயரமாகவும், அதற்கேற்ற உடல் எடையுடனும் இருப்பார்கள்.. அழகான தோற்றமும், அழகான முகவடிவமைப்பையும் கொண்டவர்களாக இருப்பார்கள்..

இடுப்பு மச்சம்: இவர்களது பேச்சிலேயே பலரும் விழுந்துவிடுவார்களாம்.. இதனால், உயர்ந்த நபர்களின் நட்பு எளிதாக கிடைத்துவிடும்.. கடவுள் பக்தி நிறைந்தவர்களாகவும், கலை, கைத்தொழில், சங்கீதம் என பலதுறைகளில் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இதனால், பணமும் தட்டுப்பாடின்றி வந்துகொண்டிருக்குமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+